அமித் ஷாவை வெறிநாய் கடித்துவிட்டது: கர்நாடக அமைச்சர் விமர்சனம்!
M. T. Vasudevan Nair: பிரபல எழுத்தாளரும் இயக்குநருமான எம்.டி.வாசுதேவன் நாயர் மருத்துவமனையில் அனுமதி
பிரபல மலையாள எழுத்தாளரும், சினிமா இயக்குநருமான எம்.டி.வாசுதேவன் நாயர் உடல்நலக்குறைவால் கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
91 வயதான எம்.டி.வாசுதேவன் நாயர் குறிப்பிடத்தக்க பல நாவல்களையும் ஏராளமான சிறுகதைகளையும் எழுதி இருக்கிறார். மம்மூட்டி நடித்த ‘ஒரு வடக்கன் வீரக்கதா’, கமல்ஹாசன் மலையாளத்தில் நடித்த ‘கன்னியாகுமரி’ உட்பட 54 திரைப்படங்களுக்குத் திரைக்கதை எழுதி இருக்கிறார்.
'நிர்மால்யம்', 'பந்தனம்', 'மஞ்சு கடவு' உட்பட சில படங்களை இயக்கியிருக்கிறார். குறிப்பாக சமீபத்தில் அவரது பல்வேறு சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு அண்மையில் ‘மனோரதங்கள்’ என்ற பெயரில் ஆந்தாலஜியாக வெளியானது.
இந்தியாவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீடம் விருது கடந்த 1996-ம் ஆண்டு அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் சிறந்த திரைக்கதைக்காக 4 தேசிய விருதுகளையும், பத்ம பூஷண் விருதையும் பெற்றிருக்கிறார்.
இந்நிலையில் எம்.டி.வாசுதேவன் நாயர் உடல்நலக்குறைவால் கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.