செய்திகள் :

கோயிலின் உணவு இயந்திரத்தில் துப்பட்டா சிக்கி பெண் பலி!

post image

மத்தியப் பிரதேசம்: மஹாகாலேஸ்வர் கோயிலின் உணவுக்கூடத்திலுள்ள இயந்திரத்தில் துப்பட்டா சிக்கியதில் கழுத்து நெறிக்கப்பட்டு பெண் ஒருவர் பலியானார்.

உஜ்ஜயின் மாவட்டத்திலுள்ள மஹாகாலேஸ்வர் கோயிலின் உணவுக்கூடத்தில் பக்தர்ககளுக்கு உணவு வழங்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில் இன்று (டிச.21) அதிகாலை ரஜ்னி காத்ரி (வயது-30) எனும் பெண் சமையல் பணியில் ஈடுப்பட்டிருந்தபோது அங்குள்ள உருளைக்கிழங்கு உரிக்கும் இயந்திரத்தில் அவரது துப்பட்டா சிக்கியது. இதில் கழுத்து நெறிக்கப்பட்டு உயிருக்கு போராடி மயங்கியுள்ளார்.

இதையும் படிக்க: குடியிருப்புக் கட்டடத்தில் தீ! 2 குழந்தைகள் உள்பட 4 பேர் பலி!

இதனைக் கண்ட சக ஊழியர்கள் உடனடியாக அந்த இயந்திரத்தை நிறுத்தினார்கள், பின்னர் அவரை அந்த இயந்திரத்திலிருந்து மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த காவல் துறையினர் அவரது உடலை உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர். அவர் பணியாற்றிய உணவுக்கூடத்தின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், மாநில அரசின் சார்பில் அவரது குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசுக்கு மக்கள் உரிய நேரத்தில் தகுந்த பதிலடி தருவார்கள்: மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டின் உரிமைகளை தரவில்லை என்றால் மத்திய அரசுக்கு மக்கள் உரிய நேரத்தில் தகுந்த பதிலடி தருவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரி... மேலும் பார்க்க

பூர்வக்குடியினருக்கு சொந்தமான 2,000 ஹெக்டேர் நிலம் திரும்ப ஒப்படைப்பு!

மெக்ஸிகோ நாட்டின் பூர்வக்குடியினருக்கு சொந்தமான 2,000 ஹெக்டேர் நிலத்தை அவர்களிடம் திரும்ப ஒப்படைக்க அந்நாட்டு அதிபர் ஆணை பிறப்பித்துள்ளார்.மெக்ஸிகோவின் பூர்வீகப் பழங்குடியான ராராமுரி என்றழைக்கப்படும் ... மேலும் பார்க்க

வார்டு மறுவரையறைக்குப் பின்னரே உள்ளாட்சித் தேர்தல்: தமிழக அரசு

வார்டு மறுவரையறைக்குப் பின்னரே உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இட ஒதுக்கீட்டுக்கான தொகுதிகளை முடிவு செய்யாமல் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கூடாத... மேலும் பார்க்க

உலக செஸ் சாம்பியன் குகேஷ் உருவத்தை வண்ண நூலால் வரைந்து வாழ்த்திய பெண் ஓவியர்!

கோவை : இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற டி.குகேஷின் உருவத்தை வண்ண நூலால் வரைந்து வாழ்த்து தெரிவித்துள்ளார் பெண் ஓவியர் ரேவதிசௌந்தர்ராஜன்.இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற டி. குகே... மேலும் பார்க்க

நெல்லையில் மருத்துவக் கழிவுகள் கொட்டிய லாரி பறிமுதல்

திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் லாரி பறிமுதல் செய்யப்பட்டு லாரி ஓட்டுநர் மற்றும் உரிமையாளரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.திருநெ... மேலும் பார்க்க

வகுப்பறையில் மாணவியை பாம்பு கடித்த விவகாரம்! அரசு நடவடிக்கை!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்திலுள்ள அரசு உதவிபெறும் பள்ளி வகுப்பறையில் எழாம் வகுப்பு மாணவியை விஷப்பாம்பு கொத்தியதைத் தொடர்ந்து அரசு விசாரணையைத் துவங்க உத்தரவிட்டுள்ளது.திருவனந்தபுரத்திலுள்ள நெ... மேலும் பார்க்க