மத்திய அரசுக்கு மக்கள் உரிய நேரத்தில் தகுந்த பதிலடி தருவார்கள்: மு.க.ஸ்டாலின்
ஆர்-வாலட் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் 3% சலுகை!
பயணிகள் முன்பதிவில்லா டிக்கெட்டுகளை ஆர்-வாலெட் பயன்படுத்தி டிக்கெட் எடுத்தால் 3% சலுகை வழங்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க, முன்பதிவில்லா பெட்டிகளில் பயணிக்க ரயில் நிலைய கவுன்டர்களில் நீண்ட வரிசையில் காத்திருக்காமல், யுடிஎஸ் மொபைல் ஆப் மூலமாக டிக்கெட் எடுக்கும் வசதி உள்ளது. இந்த செயலி மூலமாக டிக்கெட் எடுத்தால் சலுகையும் வழங்கப்படுகிறது.
இதையும் படிக்க | ஜெர்மனி கிறிஸ்துமஸ் சந்தையில் தாறுமாறாக ஓ(ட்)டிய கார்! 2 பேர் பலி! - என்ன நடந்தது?
இந்நிலையில் யுடிஎஸ் செயலியில் உள்ள ஆர்-வாலெட்டைப் பயன்படுத்தி யுடிஎஸ் மொபைல் ஆப் அல்லது ஏடிவிஎம் (ஆட்டோமேட்டிக் டிக்கெட் வென்டிங் மிஷின்) மூலம் டிக்கெட் எடுக்கும்போது, டிக்கெட் கட்டணத்தில் 3% கேஷ்பேக் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை இன்று(டிச. 21) முதல் அமலுக்கு வந்துள்ளது.
முன்பு, ஆர்-வாலெட்டை ரீசார்ஜ் செய்யும்போது வழங்கப்பட்டு வரும் 3% சலுகையும் தொடர்கிறது.
அனைத்து வகையான முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகள், நடைமேடை டிக்கெட், சீசன் டிக்கெட்டுகளை யுடிஎஸ் மொபைல் செயலியில் உள்ள ஆர்-வாலெட் அல்லது ஏடிவிஎம் மூலமாக எடுக்கலாம்.