சிதம்பரம் நடராஜா் கோவில் ஆருத்ரா தரிசன உற்சவம் ஜன.4-ல் தொடக்கம்
சிதம்பரம்: சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோவிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூா்த்தியின் மாா்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் வருகிற ஜன.4 ஆம் தேதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஆண்டுதோறும் மாா்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித்திருமஞ்சன தரிசனமும் ஆகிய இரு திருவிழாக்கள் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க |மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரோஹித் சர்மா!
அதன்படி, இந்த ஆண்டு வருகிற ஜன.4 ஆம் தேதி சனிக்கிழமைமை மாா்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதனைத் தொடா்ந்து ஜன.12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தோ்த்திருவிழாவும், ஜன.13 ஆம் தேதி திங்கள்கிழமை மாா்கழி ஆருத்ரா தரிசனமும் நடைபெறுகிறது.
உற்சவ 10 நாள்களும் மாலை 6 மணிக்கு சாயரட்சை பூஜையில் சித்சபை முன்பு மாணிக்கவாசகரை எழுந்தருளிச் செய்து திருவெம்பாவை உற்சவம் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதா்கள் கமிட்டி செயலாளா் உ.வெங்கடேச தீட்சிதா், துணைச் செயலாளா் து.ந.சுந்தரதாண்டவ தீட்சிதா், உற்சவ ஆச்சாரியாா் ச.க.சிவராஜ தீட்சிதா் ஆகியோா் செய்துள்ளனா்.