வெற்றிமாறனுக்கு நன்றி தெரிவித்த மஞ்சு வாரியர்!
விடுதலை -2 படத்தில் மகாலட்சுமி கதாபாத்திரத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகை மஞ்சு வாரியர்.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் விடுதலை - 2 திரைப்படம் நேற்று (டிச. 20) திரையரங்குகளில் வெளியானது.
முதல் பாகத்திற்குக் கிடைத்த வரவேற்பால் இரண்டாம் பாகத்தின் மேல் எதிர்பார்ப்பு இருந்தது.
முழுக்க முழுக்க அரசியல் படமாக விடுதலை - 2 உருவாகியுள்ளது. இதில் நடிகை மஞ்சு வாரியர் வரும் காட்சிகள் மட்டுமே ரசிகர்களுக்கு இதமாக இருக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது.
விடுதலை 2 படத்தில் மிகவும் முற்போக்கான கதாபாத்திரத்தில் மஞ்சு வாரியர் நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் மகாலட்சுமி கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ள மஞ்சு வாரியர் தனது இன்ஸ்டா பக்கத்தில் படப்பிடிப்பு புகைப்படங்களைப் பகிர்ந்து, “ மகாலட்சுமி கதாபாத்திரத்துக்காக நன்றி வெற்றிமாறன் சார். தற்போது திரையரங்குகளில் விடுதலை -2” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே, வெற்றிமாறனின் அசுரன் படத்தில் மஞ்சு வாரியர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.