அடுத்த தளபதியா? கிண்டலாக பதிலளித்த சூரி!
நடிகர் சூரி விடுதலை - 2 படத்திற்காகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் உருவான விடுதலை - 2 திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இயக்குநர் வெற்றி மாறனின் 4 ஆண்டுகால படமாக உருவாகியுள்ள விடுதலை மீது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இருந்தது.
படமும் கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் வேளையில் திருச்சியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த நடிகர் சூரி, “விடுதலை - 2 இயற்கையுடன் ஒன்றி நம் வாழ்க்கைக்கு நெருக்கமான வகையில் உருவான திரைப்படம்.
மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அரசியல் பேசப்பட்டிருக்கிறது. விடுதலை - 1 படத்திற்குக் கிடைத்த ஆதரவைப்போல் இரண்டாம் பாகமும் திருப்திகரமாக அமையும் என நினைக்கிறேன். எல்லாருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும்.” என்றார்.
இதையும் படிக்க: வன்முறைதான் தீர்வா? விடுதலை - 2 திரை விமர்சனம்!
அப்போது, ரசிகர் ஒருவர் சூரியை பார்த்து, ‘அடுத்த தளபதி’ எனக் கத்தினார். அதைக்கேட்ட சூரி, வாயில் விரலை வைத்து சிரித்தபடி, ‘நான் உங்களில் ஒருவனாக இருப்பதே நல்லது.’ என்றார்.
நடிகர் சூரி தற்போது இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் மாமன் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.