புதிய திரைக்கதையுடன் கமல்ஹாசன்!
நடிகர் கமல்ஹான் புதிய திரைக்கதை குறித்து பதிவிட்டுள்ளார்.
தக் லைஃப் திரைப்படத்திற்குப் பின் நடிகர் கமல்ஹாசன் சண்டைப் பயிற்சியாளர்கள் அன்பறிவ் இயக்கும் படத்தில் நாயகனாக நடிக்கிறார்.
இவர்கள் இருவரும் கூலி படப்பிடிப்பில் இருப்பதால் நடிகர் கமல்ஹாசன் அமெரிக்கா சென்றார். அங்கு, அவர் ஏஐ தொழில்நுட்பம் குறித்து படித்து வருவதாகத் தெரிகிறது.
இதையும் படிக்க: துல்கர் சல்மான் படத்தில் இணைந்த எஸ். ஜே. சூர்யா!
சில நாள்களுக்கு முன் அமெரிக்காவிலிருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட கமல்ஹாசன், குளிர்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கையுறைகளை அணிந்தபடி, ‘ குழந்தை கையுறைகளுடன் என் புதிய ஸ்கிரிப்ட்டை கையாள்கிறேன்’ எனத் தெரிவித்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.