நீரிழிவு நோயாளிகள் இனிப்பு சாப்பிடக்கூடாதா? - நம்பிக்கையும் உண்மையும்!
சர்க்கரை அதிகம் சாப்பிடுவதால் நீரிழிவு நோய் ஏற்படுகிறதா? இது வயதானவர்களை மட்டும்தான் பாதிக்குமா?
நீரிழிவு நோய் பற்றிய தவறான நம்பிக்கைகளுக்கு பதில் அளிக்கிறார் பெங்களூரு அஸ்தர் சிஎம்ஐ மருத்துவமனை சுரப்பியல் துறை நிபுணர் டாக்டர் டி.எம். மகேஷ்.
சர்க்கரை அதிகம் சாப்பிடுவதால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது
சர்க்கரை அதிகமாக சாப்பிடுவது டைப் -2 நீரிழிவு நோயை உருவாக்கும். ஆனால் இது ஒன்று மட்டும் காரணமல்ல. போதுமான இன்சுலின் உற்பத்தி (வகை-1) அல்லது இன்சுலின் எதிர்ப்பின் (வகை-2) காரணமாக ரத்த சர்க்கரை அளவை உடலால் கட்டுப்படுத்த முடியாதபோது நீரிழிவு நோய் ஏற்படுகிறது. மரபியல், வயது, உடல் உழைப்பின்மை, உடல் பருமன் ஆகியவை நீரிழிவு நோயின் ஆபத்துக் காரணிகளாகும்.
இதையும் படிக்க | வீட்டில் சமைக்கிற உணவிலும் வில்லங்கமா? எப்படி?
நீரிழிவு நோயாளிகள் இனிப்பு அல்லது மாவுச்சத்து உணவுகளைச் சாப்பிட முடியாது
நீரிழிவு நோயாளிகள் இனிப்புகள், கார்போஹைட்ரேட்டுகளை சாப்பிடலாம். ஆனால், குறைவாக சாப்பிட வேண்டும். உடலில் ரத்த சர்க்கரை அளவின் சமநிலையைப் பொருத்து உண்ணலாம்.
கார்போஹைட்ரேட், ரத்த சர்க்கரை அளவைப் பாதிக்கிறது, எனவே, கட்டுப்பாடு முக்கியமானது. இதில் முக்கிய விஷயம் ஆரோக்கியமான உணவைத் தேர்வு செய்வது. கிளைசெமிக் குறியீடு குறைவாக உள்ள முழு தானியங்கள் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். நார்ச்சத்து, புரதங்கள் அல்லது ஆரோக்கியமான கொழுப்பு உணவுகள் ரத்த சர்க்கரையை நிர்வகிக்க உதவும்.
இதையும் படிக்க | பல் சொத்தைக்கு டீ/காஃபிதான் காரணமா? - மருத்துவர் என்ன சொல்கிறார்?
நீரிழிவு நோய் வயதானவர்களை மட்டுமே பாதிக்கிறது
டைப்-2 வகை நீரிழிவு வயதானவர்களுக்கு மிகவும் பொதுவானது என்றாலும் குழந்தைகள் மற்றும் பதின்வயதினர் உள்பட எந்த வயதினரையும் இது பாதிக்கலாம், குறிப்பாக உடல் பருமன் மற்றும் உடல் செயல்பாடின்றி அமர்ந்தே இருப்பவர்களுக்கு பாதிப்பு வரலாம்.
டைப்-1 நீரிழிவு, இது ஒரு தன்னுடல் தாக்க நோயாகும், இது பெரும்பாலும் குழந்தைப் பருவத்திலோ அல்லது இளமைப் பருவத்திலோ உருவாகிறது. வயது வித்தியாசமின்றி ஆரம்பகால கண்டறிதலும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களும் அனைவருக்கும் முக்கியம்.