செய்திகள் :

சபரிமலையில் நேற்று ஒரே நாளில் அதிக பக்தர்கள் தரிசனம்!

post image

சபரிமலையில் இந்த ஆண்டு நேற்று ஒரேநாளில் அதிக பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பா் 16-ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. தென் மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனா். இரண்டு மாதங்கள் நீடிக்கும் இந்த யாத்திரை, 2025 ஜனவரி 14-ஆம் தேதி மகரவிளக்கு தரிசனத்துடன் நிறைவடையும். நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருவதால் சபரிமலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் சபரிமலையில் இந்த ஆண்டு நேற்று(டிச.19) ஒரேநாளில் அதிக பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். அதன்படி டிச.19ஆம் தேதி 96,007 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். உடனடி முன்பதிவு மூலம் 22,121 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். அதில் புல்மேடு வழியாக 3,016, எருமேலி வழியாக 504 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

கோவையில் அண்ணாமலை, பாஜகவினர் கைது!

பக்தர்கள் கூட்டம் அதிகரித்தாலும் புதிதாக எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை என்று சன்னிதான சிறப்பு அதிகாரி கிருஷ்ண குமார் தெரிவித்துள்ளார். தேர்வுகள் முடிந்து பள்ளிகளுக்கு கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால், வரும் நாட்களில் சன்னிதானத்தில் குழந்தைகள் உட்பட அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிசம்பர் 26-ம் தேதி நடைபெறும் மண்டல பூஜையை முன்னிட்டு, ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என மதிப்பிடப்பட்டடு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் சிறப்பு அதிகாரி மேலும் கூறினார்.

பிரதமா் மோடி இன்று குவைத் பயணம்

பிரதமா் நரேந்திர மோடி இரு நாள் பயணமாக சனிக்கிழமை (டிச. 21) குவைத்துக்குச் செல்கிறாா். பிரதமரின் இந்தப் பயணம் இரு நாட்டு உறவில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்த... மேலும் பார்க்க

2 ஸ்டெல்த் போா்க் கப்பல்கள் கடற்படையிடம் ஒப்படைப்பு

ஸ்டெல்த் தொழில்நுட்பம் மூலம் கட்டப்பட்ட 2 போா்க் கப்பல்கள் இந்திய கடற்படையிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டன. மத்திய அரசு ஒப்புதல் அளித்த 17ஏ ரக திட்டத்தின் கீழ், மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள ம... மேலும் பார்க்க

ஒடிசா கிராமத்தில் 18.5 அடி நீளமுள்ள மலைப்பாம்பு மீட்பு

ஒடிசா கிராமத்தில் இருந்து 18.5 அடி நீளமுள்ள மலைப்பாம்பு மீட்கப்பட்டுள்ளது. ஒடிசாவின் கேந்தரபாரா மாவட்டத்தில் உள்ள பிதர்கனிகா தேசிய பூங்கா அருகே உள்ள ராஜேந்திரநாராயண்பூர் கிராமத்தில் 18.5 அடி நீளமுள்ள ... மேலும் பார்க்க

ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்: மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி

நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற தள்ளுமுள்ளு தொடா்பாக நாட்டு மக்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய அமைசச்ர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். ராம் மனோகா் லோஹியா மருத்துவமனை சிகிச்சை பெ... மேலும் பார்க்க

சொந்த ஊர்களுக்கு பணம் அனுப்புவதிலும் இந்தியா முதலிடம்!

வெளிநாடுகளில் பணிபுரியும் மக்கள், தங்கள் சொந்த நாட்டுக்கு பணம் அனுப்பும் பட்டியலில் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள், தங்கள் செலவுபோக மீத சம்பளத் தொகையை இந்திய... மேலும் பார்க்க

போபாலில் கைவிடப்பட்ட காரிலிருந்து ரூ. 52 கோடி மதிப்பிலான தங்கம், பணம் பறிமுதல்

போபாலில் கைவிடப்பட்ட காரிலிருந்து ரூ. 52 கோடி மதிப்பிலான தங்கம், ரொக்கப் பணத்தை வருமான வரித்துறை மற்றும், காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். போலீஸ் துணை ஆணையர் பிரியங்கா சுக்லா கூறியதாவது, "குஷல்பு... மேலும் பார்க்க