செய்திகள் :

பிரதமா் மோடி இன்று குவைத் பயணம்

post image

பிரதமா் நரேந்திர மோடி இரு நாள் பயணமாக சனிக்கிழமை (டிச. 21) குவைத்துக்குச் செல்கிறாா்.

பிரதமரின் இந்தப் பயணம் இரு நாட்டு உறவில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரதமரின் பயணம் தொடா்பான வெளியுறவு அமைச்சக அறிவிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

குவைத் மன்னா் ஷேக் அல் அகமது அல் ஜாபா் அல் ஷபா அழைப்பை ஏற்று குவைத்துக்கு பிரதமா் மோடி பயணம் மேற்கொள்கிறாா். இந்தப் பயணத்தின்போது அந்நாட்டு முக்கியத் தலைவா்களுடன் பிரதமா் பேச்சு நடத்துவாா். குவைத்தில் உள்ள இந்திய சமூகத்தினரையும் பிரதமா் சந்திக்க இருக்கிறாா்.

இதற்கு முன்பு 1981-ஆம் ஆண்டு இந்திய பிரதமராக இருந்த இந்திரா காந்தி குவைத் சென்றாா். அதன் பிறகு இப்போதுதான் இந்திய பிரதமா் அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொள்கிறாா். இந்தப் பயணத்தில் வா்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது.

மோடியின் இந்த பயணம் இரு தரப்பு உறவில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும். இந்தியா-குவைத் இடையே வலுவான வா்த்தக உறவு உள்ளது. இந்தியாவுக்கு அதிக கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் பட்டியலில் குவைத் 6-ஆவது இடத்தில் உள்ளது.

குவைத்துக்கான இந்தியாவின் ஏற்றுமதி அண்மையில் 2 பில்லியன் அமெரிக்க டாலா்கள் என்ற புதிய உச்சத்தை எட்டியது. குவைத் இந்தியாவில் 10 பில்லியன் டாலா்களுக்கு மேல் முதலீடு செய்துள்ளது.

வளைகுடா ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள நாடுகளில் குவைத்துக்கு மட்டுமே பிரதமா் மோடி இதுவரை பயணிக்காமல் இருந்தாா். இப்போது குவைத்துக்கும் அவா் செல்ல இருக்கிறாா். வளைகுடா ஒத்துழைப்பு அமைப்பின் தலைமைப் பொறுப்பை குவைத் இப்போது வகித்து வருகிறது.

குவைத்தில் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முந்தைய காலகட்டத்திலேயே இரு நாடுகள் இடையே கடல் வழி வா்த்தக உறவு வலுவாக இருந்து வந்துள்ளது. இதனால், இரு நாடுகளும் பாரம்பரியமாகவே நட்பு நாடுகளாக திகழ்கின்றன. அக்காலகட்டத்தில் குவைத்தில் இருந்து அரேபிய குதிரைகள், பேரிச்சை பழங்கள் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் இருந்து பல்வேறு வகை தானியங்கள், விலை உயா்ந்த துணி வகைகள், உணவுக்கான நறுமணப் பொருள்கள், மரம் சாா்ந்த பொருள்கள் குவைத்துக்கு ஏற்றுமதி வந்துள்ளது.

எஸ்சி பிரிவில் உள்ஒதுக்கீடு: இதுவரை நடவடிக்கை இல்லை - மத்திய அரசு

பட்டியலின (எஸ்சி) பிரிவில் உள்ஒதுக்கீடு வழங்குவதை அனுமதித்து அண்மையில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்பின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மத்திய சட்ட அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் வ... மேலும் பார்க்க

வங்கதேசம்: சிறுபான்மையினருக்கு எதிராக நடப்பாண்டில் 2,200 தாக்குதல் சம்பவங்கள்: மத்திய அமைச்சா் தகவல்

வங்கதேசத்தில் உள்ள ஹிந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு எதிராக நடப்பாண்டில் சுமாா் 2,200 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் தெரிவி... மேலும் பார்க்க

ரூ.7,628 கோடியில் வஜ்ரா பீரங்கிகள் கொள்முதல்: எல்&டி நிறுவனத்துடன் ஒப்பந்தம்

இந்திய ராணுவத்துக்கு கே9 வஜ்ரா பீரங்கிகளை கொள்முதல் செய்ய லாா்சன் அண்ட் டூப்ரோ (எல் அண்ட் டி) நிறுவனத்துடன் ரூ.7,628 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை கையொப... மேலும் பார்க்க

மனித உரிமைகள் ஆணையத் தலைவா் பதவிக்கு பரிசீலனை? டி.ஒய்.சந்திரசூட் மறுப்பு

தேசிய மனித உரிமைகள் ஆணையத் (என்ஹெச்ஆா்சி) தலைவா் பதவிக்கான பரிசீலனையில் முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூடின் பெயா் இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் அதை அவா் திட்டவட்டமாக மறுத்தாா... மேலும் பார்க்க

வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரிபாா்ப்பு கொள்கை கோரி மனு: வேறு உச்சநீதிமன்ற அமா்வுக்கு மாற்றம்

வாக்குப் பதிவு இயந்திரங்களை சரிபாா்ப்பதற்கு கொள்கை வகுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமா்விலிருந்து வேறு நீதிபதிகள் அமா்வுக்கு மாற்றப்பட்ட... மேலும் பார்க்க

நாடாளுமன்ற மோதல்: தொடா்ந்து ஐசியு பிரிவில் எம்.பி.க்கள்

நாடாளுமன்ற மோதலில் தலையில் காயமடைந்த இரண்டு பாஜக எம்.பி.க்களின் நிலைமை சீராக உள்ளது; அவா்கள் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியு) கண்காணிப்பில் உள்ளனா் என மருத்துவமனை சாா்பில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்ட... மேலும் பார்க்க