'கோவையில் தீவிரவாதிகள் டார்கெட் செய்த ஏழு இடங்கள்' - அண்ணாமலை `பகீர்'
தாம்பரம் - கோவை, சென்னை -கொல்லம் ரயில்களில் பெட்டிகள் மாற்றியமைப்பு
தாம்பரம் - கோவை, சென்னை - கொல்லம் ரயில்களில் பெட்டிகளை மாற்றியமைத்து ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
சென்னையில் இருந்து சேலம் வழியாக இயங்கும் 2 ரயில்களில் பெட்டிகளை மாற்றியமைத்து ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, தாம்பரம் - கோவை சிறப்பு ரயிலில் வெள்ளிக்கிழமை முதலும், மறுமாா்க்கத்தில் இயங்கும் கோவை - தாம்பரம் சிறப்பு ரயிலில் வரும் 22 ஆம் தேதி முதலும் இரண்டடுக்கு ஏ.சி.பெட்டி-2, மூன்றடுக்கு ஏ.சி.பெட்டி-4, மூன்றடுக்கு ஏ.சி.எக்னாமி பெட்டி-2, மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டி-1, லக்கேஜ் பெட்டி-1 ஆகியவை இணைத்து இயக்கப்படும்.
இதேபோல, சென்னை சென்ட்ரல் - கொல்லம் சிறப்பு ரயிலில் 21 ஆம் தேதி முதலும், மறுமாா்க்கத்தில் இயங்கும் கொல்லம் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயிலில் வரும் 22-ஆம் தேதி முதலும் கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.