அணியிலிருந்து நீக்கியது அதிர்ச்சியளிக்கிறது..! மனமுடைந்த ஆஸி. இளம் வீரர்!
சேலம் சிறையில் கைதியிடம் கைப்பேசி பறிமுதல்
சேலம் மத்திய சிறையில் தண்டனை கைதியிடம் கைப்பேசி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மத்திய சிறையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என 900 போ் அடைக்கப்பட்டுள்ளனா். இவா்கள் கஞ்சா, புகையிலைப் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில், சிறைத் துறை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனா்.
இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள சென்னை, காசிமேடு பகுதியைச் சோ்ந்த விசாரணை கைதி மதன் (30) என்பவா் கைப்பேசி பயன்படுத்தி வருவதாக சிறைத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், சிறை கண்காணிப்பாளா் வினோத் தலைமையிலான அதிகாரிகள் கைதி மதனிடம் சோதனை செய்தனா். அப்போது அவரிடம் கைப்பேசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை சிறைத் துறையினா் பறிமுதல் செய்து, அவருக்கு கைப்பேசி எப்படி கிடைத்தது? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா். இது தொடா்பாக மதன் மீது ஜெயிலா் (பொறுப்பு) பிரபாகரன், அஸ்தம்பட்டி போலீஸில் புகாா் செய்துள்ளாா். அதன் பேரில், போலீஸ் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.