செய்திகள் :

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

post image

வேதாரண்யம்: நாகை மாவட்டம், கோடியக்கரைக்கு அப்பால் கடலில் 2 படகுகளில் மீன் பிடித்துக்கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே அக்கரைப்பேட்டை, பெருமாள் பேட்டை பகுதியை சார்ந்த மீனவர்கள் இரண்டு படகுகளில் வழக்கம்போல மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

மீனவர்கள் கோடியக்கரை அப்பால் வெள்ளிக்கிழமை இரவு மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது, இரண்டு படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலில் படுகாயம் அடைந்த மீனவர்கள் ராஜேந்திரன், ராஜ்குமார்.

இதையும் படிக்க |மலையாள எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர் கவலைக்கிடம்!

மேலும் மீனவர்களின் மீன்பிடி வலைகள் உள்ளிட்ட பொருள்களை அவர்கள் கைப்பற்றிச் சென்றுள்ளனர்.

இதனால் படுகாயம் அடைந்த மீனவர்கள் ராஜேந்திரன், ராஜ்குமார் ஆகியோர் சனிக்கிழமை காலை கரையேறி வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான கள ஆய்வு தொடக்கம்

மதுரை: மதுரை மாவட்டத்தில் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்படுவது குறித்து சென்னை மெட்ரோ ரயில் இயக்குநர் அர்ஜூனன் இன்று நேரில் கள ஆய்வு மேற்கொண்டார்.மதுரையில் மெட்ரோ ரயில் சேவை அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட பண... மேலும் பார்க்க

தாம்பரம் - பெருங்களத்தூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

தாம்பரம் - பெருங்களத்தூர் பகுதிகளுக்கு இடைப்பட்ட பகுதியில் சனிக்கிழமை காலை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பார்க்க

நீண்ட நோயால் விபரீத முடிவு! தம்பதியர் தற்கொலை!

சேலத்தில் நோயால் அவதியுற்ற மனைவியுடன் சேர்ந்து கணவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சேலம் மாவட்டம், ஆணையம்பட்டி ஊராட்சியைச் சேர்ந்தவர் சுந்தரராஜன் (70), இவரது மனைவி பொன்னம... மேலும் பார்க்க

அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவிழக்கும்!

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் படிப்படியாக வலுவிழக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த... மேலும் பார்க்க

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 28.71 கோடியாக உயா்வு: தமிழக அரசு

தமிழகத்தில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 28.71 கோடியாக உயா்ந்துள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா். ராஜேந்திரன் தெரிவித்தாா். இது குறித்து, அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் சுற்ற... மேலும் பார்க்க

முதியவரின் சிறுநீரகத்தில் புற்றுநோய்க் கட்டி: நுண் அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்

முதியவரின் சிறுநீா்ப்பை மற்றும் சிறுநீரகத்தில் உருவான புற்றுநோய்க் கட்டிகளை நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் சென்னை, வடபழனியில் உள்ள காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் அகற்றியுள்ளனா். இது தொடா்பாக காவேரி ம... மேலும் பார்க்க