செய்திகள் :

நீண்ட நோயால் விபரீத முடிவு! தம்பதியர் தற்கொலை!

post image

சேலத்தில் நோயால் அவதியுற்ற மனைவியுடன் சேர்ந்து கணவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், ஆணையம்பட்டி ஊராட்சியைச் சேர்ந்தவர் சுந்தரராஜன் (70), இவரது மனைவி பொன்னம்மாள். இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் இருந்தாலும், இவர்கள் இருவரும் கெங்கவல்லியில் தனியாகத்தான் வசித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக பொன்னம்மாளுக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தப் பாதிப்பு இருந்ததுடன், சில மாதங்களுக்கு முன்பிலிருந்து மூலநோயாலும் அவதியுற்று வந்தார்.

இந்த நிலையில், உடல்நிலை நாளுக்குநாள் மோசமானதால், தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக சுந்தரராஜனிடம் பொன்னம்மாள் கூறியுள்ளார். தானும் சேர்ந்து தற்கொலை செய்து கொள்கிறேன் எனக் கூறிய சுந்தரராஜனும், அவரது மனைவி பொன்னம்மாள் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

இதையும் படிக்க:பேருந்து நிலையத்தில் பள்ளத்தில் தவறி விழுந்த தி.மு.க. நிா்வாகி உயிரிழப்பு

இதனைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் நீண்ட நேரமாக வீட்டிலிருந்து வெளியே வராததால், சந்தேகமடைந்த அண்டை வீட்டார், சுந்தரராஜனின் வீட்டுக்குள் சென்று பார்த்தனர்.

சுந்தரராஜனும் அவரது மனைவியும் மயங்கிய நிலையில் இருப்பதை அறிந்து, முதலுதவி அளித்து, பின்னர் அவர்கள் இருவரையும் மேல்சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இருப்பினும், சிகிச்சைப் பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம், அப்பகுதியினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

தென்காசி: தலை துண்டித்து விவசாயி படுகொலை!

தென்காசியில் குளத்தில் காவல் பணியில் இருந்தவர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தென்காசியில் ஆழ்வார்க்குறிச்சியில் அச்சங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் இருதயர... மேலும் பார்க்க

மதுரையில் மெட்ரோ ரயில் வழித்தடங்கள் குறித்து திட்ட இயக்குநர் தகவல்!

மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவது குறித்து மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர் குழு ஆய்வு செய்தனர்.மதுரை தியாகராசர் பொறியியல் கல்லுாரியில் 2010 முதல் 2020 ஆம் ஆண்டுகளில் படித்த முன்னாள் மாணவர்கள... மேலும் பார்க்க

மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான கள ஆய்வு தொடக்கம்

மதுரை: மதுரை மாவட்டத்தில் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்படுவது குறித்து சென்னை மெட்ரோ ரயில் இயக்குநர் அர்ஜூனன் இன்று நேரில் கள ஆய்வு மேற்கொண்டார்.மதுரையில் மெட்ரோ ரயில் சேவை அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட பண... மேலும் பார்க்க

தாம்பரம் - பெருங்களத்தூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

தாம்பரம் - பெருங்களத்தூர் பகுதிகளுக்கு இடைப்பட்ட பகுதியில் சனிக்கிழமை காலை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பார்க்க

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

வேதாரண்யம்: நாகை மாவட்டம், கோடியக்கரைக்கு அப்பால் கடலில் 2 படகுகளில் மீன் பிடித்துக்கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே அக்க... மேலும் பார்க்க

அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவிழக்கும்!

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் படிப்படியாக வலுவிழக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த... மேலும் பார்க்க