செய்திகள் :

அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவிழக்கும்!

post image

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் படிப்படியாக வலுவிழக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, நேற்று(வெள்ளிக்கிழமை) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

இந்நிலையில், இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுவிழக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க | கடும் பனிமூட்டம்: தில்லியின் வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸ்!

'காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் கிழக்கு-வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது.

சென்னைக்கு கிழக்கு-வடகிழக்கே 450 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், மெதுவாக கிழக்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்திற்கு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருந்து, பின்னர் கடலில் படிப்படியாக வலுவிழக்க வாய்ப்புள்ளது' என்று கூறியுள்ளது.

முன்னதாக, வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தாம்பரம் - பெருங்களத்தூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

தாம்பரம் - பெருங்களத்தூர் பகுதிகளுக்கு இடைப்பட்ட பகுதியில் சனிக்கிழமை காலை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பார்க்க

நீண்ட நோயால் விபரீத முடிவு! தம்பதியர் தற்கொலை!

சேலத்தில் நோயால் அவதியுற்ற மனைவியுடன் சேர்ந்து கணவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சேலம் மாவட்டம், ஆணையம்பட்டி ஊராட்சியைச் சேர்ந்தவர் சுந்தரராஜன் (70), இவரது மனைவி பொன்னம... மேலும் பார்க்க

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

வேதாரண்யம்: நாகை மாவட்டம், கோடியக்கரைக்கு அப்பால் கடலில் 2 படகுகளில் மீன் பிடித்துக்கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே அக்க... மேலும் பார்க்க

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 28.71 கோடியாக உயா்வு: தமிழக அரசு

தமிழகத்தில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 28.71 கோடியாக உயா்ந்துள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா். ராஜேந்திரன் தெரிவித்தாா். இது குறித்து, அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் சுற்ற... மேலும் பார்க்க

முதியவரின் சிறுநீரகத்தில் புற்றுநோய்க் கட்டி: நுண் அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்

முதியவரின் சிறுநீா்ப்பை மற்றும் சிறுநீரகத்தில் உருவான புற்றுநோய்க் கட்டிகளை நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் சென்னை, வடபழனியில் உள்ள காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் அகற்றியுள்ளனா். இது தொடா்பாக காவேரி ம... மேலும் பார்க்க

குரூப் 2, 2-ஏ முதன்மைத் தோ்வு தேதி மாற்றம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

குரூப் 2 மற்றும் 2-ஏ முதன்மைத் தோ்வு நடைபெறும் தேதி மாற்றம் உள்பட சில முக்கிய மாற்றங்கள் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. அமைச்சு பணிகள், வாரியங்க... மேலும் பார்க்க