Ashwin: "அஷ்வினை விட சிறந்த ஆல்ரவுண்டர் கிடைப்பார்; அதற்கு..." - ஜடேஜா சொல்வதென்...
Ashwin: `மெல்போர்னில் சேர்ந்து பேட்டிங் ஆட வருவேன்!' - கோலியின் வாழ்த்தும், அஷ்வினின் பதிலும்!
அனைத்து விதமான ர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய அணியின் நட்சத்திர வீரரான அஷ்வின் ஓய்வை அறிவித்தார்.
இந்திய அணிக்காக கடந்த 2011-ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அஷ்வின் இதுவரை 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 537 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அஷ்வினுக்கு விராட் கோலி தனது எக்ஸ் பக்கத்தில் "14 ஆண்டுகள் ஒன்றாக விளையாடி இருக்கிறோம். பழைய நினைவுகள் எல்லாம் கண் முன்னே வந்து சென்றன.
அஷ்வினுடன் செலவிட்ட ஒவ்வொரு தருணமும் இனிமையானவை. நீங்கள் எப்போதும் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் என்று நினைவுகூரப்படுவீர்கள்.'' என்று வாழ்த்தைத் தெரிவித்திருந்தார். அதற்கு அஷ்வின் அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.
"நன்றி நண்பா! ஏற்கனவே சொன்னது போல், மெல்போர்னில் உங்களுடன் சேர்ந்து பேட் செய்ய களமிறங்குவேன்" என குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தியா, ஆஸ்திரேலியா மோதும் நான்காவது டெஸ்ட், வரும் டிச.26ல் மெல்போர்னில் துவங்கும் நிலையில், அஷ்வினின் இந்தப் பதில் ரசிகர்களின் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.