செய்திகள் :

Ashwin: ``துப்பாக்கிய புடிங்க வாஷி!" - வாஷிங்டன் சுந்தருக்கு அஷ்வினின் ரீ-போஸ்ட்

post image

சர்வேதேச கிரிக்கெட்டில் ஃபார்மெட்டுகளையும் சேர்த்து மொத்தமாக 765 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் தமிழக வீரர் அஷ்வின் நேற்று முன்தினம் தனது ஓய்வை அறிவித்தார். அஷ்வின், 106 டெஸ்ட் போட்டிகளில் 537 விக்கெட்டுகள் வீழ்த்தி, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக தொடர் நாயகன் விருது வென்ற வீரர் என்ற சாதனையைத் தன்வசம் வைத்திருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 500 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் பட்டியலில் முத்தையா முரளிதரனுக்கு அடுத்தபடியாக அஷ்வின் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

Ashwin | அஷ்வின்

இன்னும் பல சாதனைகளுக்குச் சொந்தக்காரரான அஷ்வின், நடப்பு பார்டர் கவாஸ்கர் தொடரில் பிளெயிங் லெவனில் இடம்பெறாத போட்டியின்போது திடீரென ஓய்வு பெற்றது, பலருக்கும் அதிர்ச்சியைத் தந்திருக்கிறது. மேலும், சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்து அஷ்வினை முறையாக வழியனுப்பிவைக்க வேண்டும் என பி.சி.சி.ஐ-க்குப் பலரும் வலியுறுத்திவருகின்றனர். மறுபக்கம், அஷ்வினுடன் விளையாடிய வீரர்கள் தங்களுக்குள்ளான நினைவுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வரிசையில், தமிழகத்தைச் சேர்ந்த சக வீரர் வாஷிங்டன் சுந்தர், எக்ஸ் தளத்தில் அஷ்வினுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, ``ஒரு சக வீரர் என்பதைத் தாண்டி, நீங்கள் ஒரு இன்ஸ்பிரேஷன், வழிகாட்டி மற்றும் உண்மையான சாம்பியன். மைதானம், டிரெஸ்ஸிங் ரூமை உங்களுடன் பகிர்ந்ததில் பெருமை. ஒரே மாநிலத்திலிருந்து வந்து, சேப்பாக்கத்தின் ஒரு மூலையில் இருந்து உங்களைப் பார்த்தது முதல் உங்களுக்கெதிராவும், உங்களுடனும் விளையாடி வளர்ந்திருக்கிறேன்.

அந்த ஒவ்வொரு கணமும் எனக்குக் கிடைத்த பாக்கியம். களத்துக்குள்ளேயும், களத்துக்கு வெளியேயும் உங்களிடமிருந்து கற்றுக்கொண்டதை என்றென்றும் என்னுடன் கொண்டுசெல்வேன்." என்று பதிவிட்டிருக்கிறார்.

அதற்கு, எக்ஸ் தளத்திலேயே அஷ்வின் நடிகர் விஜய்யின் தி கோட் பட பாணியில், ``துப்பாக்கிய புடிங்க வாஷி (வாஷிங்க்டன் சுந்தர்)." என்று பதிலளித்திருக்கிறார். அஷ்வினின் கூற்றுப்படி இந்திய அணியில் அவரின் இடத்தை வாஷிங்க்டன் சுந்தரே நிரப்பும் பட்சத்தில் அது தமிழ்நாட்டுக்கும் பெருமையாக அமையும்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/TATAStoryepi01

Sachin: ``உங்களைப் போலவே பந்துவீசுகிறார் ஜாகீர்!" - டெண்டுல்கர் ஷேர் செய்த சிறுமியின் வைரல் வீடியோ

இந்திய கிரிக்கெட் கண்ட தலைசிறந்த இடதுகை வேகப் பந்துவீச்சாளர் ஜாகீர் கான். எந்த அளவுக்கென்றால், கடைசியாக 2014-ல் நியூசிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியோடு தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஜாகீர் மு... மேலும் பார்க்க

Virat Kohli: `விராட் விரைவில் குடும்பத்துடன் இந்தியாவை விட்டு...' - கோலியின் முன்னாள் பயிற்சியாளர்

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் சமீபகால ஆட்டங்கள் கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. டி20 உலகக் கோப்பை வென்ற கையோடு அந்த ஃபார்மெட்டில் மட்டும் ஒய்வை அறிவித்தார் விராட் கோலி. அதன்பின், 27 வர... மேலும் பார்க்க

Ashwin: "நான் இருந்திருந்தால்..." - அஷ்வின் ஒய்வு குறித்து கபில் தேவ் ப்ளீச்

இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் தற்போது பேசுபொருளாக இருப்பது ரவிச்சந்திரன் அஷ்வினின் திடீர் ஓய்வுதான். அதுவும் நடப்பு பார்டர் கவாஸ்கர் தொடரில் பிளெயிங் லெவனில் கூட இடம்பெறாத மூன்றாவது போட்டியின்போது யா... மேலும் பார்க்க

Ashwin: `இப்படி சொல்லியிருந்தா எனக்கு ஹார்ட் அட்டாக்கே வந்திருக்கும்' - அஷ்வினின் வைரல் பதிவு

சச்சினும், கபில் தேவ்வும் ஃபோனில் தொடர்பு கொண்டு பேசியதை அஷ்வின் நெகிழ்ச்சியாக அவரது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய அணியின் நட்சத்தி... மேலும் பார்க்க

Ashwin : ``அஷ்வின் அவமானப்படுத்தப்பட்டார்"- தந்தையின் குற்றச்சாட்டும் அஷ்வினின் விளக்கமும்

சமீபத்தில் அத்தனை விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் தமிழக வீரர் அஷ்வின் ஓய்வு பெற்றார். இந்நிலையில், அவரின் தந்தை ரவிச்சந்திரன், 'அஷ்வின் அவமானப்படுத்தப்பட்டார்.' எனப் பேசியிருப்பது பரபரப்... மேலும் பார்க்க

Champions Trophy: இந்தியா பாகிஸ்தான் விவகாரத்தில் ICC புதிய அறிவிப்பு; விரைவில் போட்டி அட்டவணை!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்தாண்டு பிப்ரவரியில் பாகிஸ்தானில் நடைபெறவிருக்கிறது. பாதுகாப்பு காரணங்களால் இந்தியா அங்கு செல்ல மறுப்பதால், இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் வேறு நாட்டில் ந... மேலும் பார்க்க