நெல்லை கொலை: இரண்டு மணி நேரத்தில் 4 பேர் கைது- இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர்...
Ashwin: `இப்படி சொல்லியிருந்தா எனக்கு ஹார்ட் அட்டாக்கே வந்திருக்கும்' - அஷ்வினின் வைரல் பதிவு
சச்சினும், கபில் தேவ்வும் ஃபோனில் தொடர்பு கொண்டு பேசியதை அஷ்வின் நெகிழ்ச்சியாக அவரது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய அணியின் நட்சத்திர வீரரான அஷ்வின் ஓய்வை அறிவித்திருக்கிறார். இந்திய அணிக்காக கடந்த 2011-ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அஷ்வின் இதுவரை 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 537 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
அஷ்வினின் ஓய்வு முடிவைத் தொடர்ந்து பலரும் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து இருகின்றனர். அந்தவகையில் சச்சினும், கபில் தேவ்வும் ஃபோனில் தொடர்பு கொண்டு பேசியதை அஷ்வின் நெகிழ்ச்சியாக அவரது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
அந்தப் பதிவில், " 25 வருடங்களுக்கு முன்னால் என்னிடம் யாராவது நீங்கள் ஸ்மார்ட் போன் வைத்திருப்பீர்கள் என்றும் இந்திய கிரிக்கெட் வீரராக உங்கள் கடைசி நாளில் உங்கள் கால் லாக் இப்படி இருக்கும் என்றும் யாராவது என்னிடம் கூறி இருந்தால் எனக்கு ஹார்ட் அட்டாக் வந்திருக்கும்" என்று தனக்கு வாழ்த்து தெரிவித்த சச்சினையும், கப்பில் தேவையும் மென்ஷன் செய்து தனது கால் லாக்கையும் ஷேர் செய்திருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...