சென்னை மெரீனாவில் உணவுத் திருவிழா தொடக்கம்!
சென்னை மெரீனா கடற்கரை சாலையில் உணவுத் திருவிழாவினை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று(டிச. 20)தொடக்கிவைத்தார்.
உணவுத் திருவிழாக்கு நுழைவுக் கட்டணம், வாகனங்கள் நிறுத்தக் கட்டணம் வசூலிக்கமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திருவிழா வரும் 24-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
நாளைமுதல் பிற்பகல் 12.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: மக்களவைத் தலைவரின் தேநீர் விருந்தை புறக்கணித்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள்!
கொங்கு மட்டன் பிரியாணி, பள்ளிப்பாளையம் சிக்கன், சிவகங்கை மட்டன் உப்புக்கறி என 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்தவா்கள் தயாரித்து விற்பனை செய்கிறார்கள்.
உணவுத் திருவிழாவுக்கு வரும் பொதுமக்கள், லேடி விலிங்டன் கல்லூரி, சென்னைப் பல்கலைக்கழகம், ராணி மேரி கல்லூரி ஆகியவற்றின் வளாகங்களில் இலவசமாக வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.