சொந்த ஊர்களுக்கு பணம் அனுப்புவதிலும் இந்தியா முதலிடம்!
வெளிநாடுகளில் பணிபுரியும் மக்கள், தங்கள் சொந்த நாட்டுக்கு பணம் அனுப்பும் பட்டியலில் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது.
வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள், தங்கள் செலவுபோக மீத சம்பளத் தொகையை இந்தியாவில் வசிக்கும் தங்கள் குடும்பத்தினருக்கு அனுப்புகின்றனர். 2024 ஆம் ஆண்டில் மட்டும் ரூ. 10,70,700 கோடி இந்தியர்களால் வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது. மற்ற நாடுகளைவிட இந்தியா அதிகளவிலான தொகையை மாற்றுவதில், இந்தியா முதலிடத்தைப் பெற்றுள்ளது.
இவ்வாறு, வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்புவதன் மூலம், அந்த நாட்டுக்கும் வருவாய் கிடைக்கிறது. இதன்மூலமாக, இந்த ஆண்டில் இந்தியா 129 பில்லியன் டாலர் வரவழைப்புடன் பணம் அனுப்புவதில் முதலிடத்திலும், தொடர்ந்து மெக்ஸிகோ (68 பில்லியன்), சீனா (48 பில்லியன்), பிலிப்பைன்ஸ் (40 பில்லியன்), பாகிஸ்தான் (33 பில்லியன்) ஆகியவை உள்ளன. உலக வங்கி தரவுகளின்படி, 2023-ல் பதிவுசெய்யப்பட்ட 1.2 சதவிகிதத்துடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு பணம் அனுப்பும் வளர்ச்சி விகிதம் 5.8 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க:வன்முறைதான் தீர்வா? விடுதலை - 2 திரை விமர்சனம்!