ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்: மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி
நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற தள்ளுமுள்ளு தொடா்பாக நாட்டு மக்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய அமைசச்ர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
ராம் மனோகா் லோஹியா மருத்துவமனை சிகிச்சை பெற்று வரும் பாஜக எம்.பி.க்கள் பிரதாப் சந்திர சாரங்கி, முகேஷ் ராஜ்புத் ஆகியோரை மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி வெள்ளிக்கிழமை சந்தித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நான் மருத்துவர்களிடம் பேசினேன். இருவரும் மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளனர். இது போன்ற சம்பவம் நாடாளுமன்றத்தில் இதற்கு முன் நடந்ததில்லை. இது வெட்கக்கேடான செயல். ராகுல் காந்தி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சி எப்போதும் பி.ஆர்.அம்பேத்கரை அவமதிப்பு செய்து வருகிறது. அவர்கள் அவருக்கு எந்த அங்கீகாரமும் வழங்கவில்லை, எப்போதும் புறக்கணித்துள்ளனர் என்றார். அம்பேத்கா் அவமதிப்பு விவகாரம் தொடா்பாக நாடாளுமன்ற வளாக நுழைவு வாயில் பகுதியில் வியாழக்கிழமை காலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பாஜக எம்.பி.க்களுக்கும், காங்கிரஸ் எம்.பி.க்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
நடுவர் தீர்ப்புக்கு எதிர்ப்பு: ஆப்கன் வீரருக்கு அபராதம்!
பாஜக எம்.பி.க்கள் தள்ளியதில் மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைரும் காங்கிரஸ் தேசியத் தலைவருமான 82 வயது மல்லிகாா்ஜுன காா்கே நிலைதடுமாறி தரையில் அமா்ந்ததாகத் தெரிகிறது. அதுபோல, காங்கிரஸ் எம்.பி.க்கள் தள்ளியதில் பாஜக எம்.பி.க்கள் பிரதாப் சந்திர சாரங்கி, முகேஷ் ராஜ்புத் ஆகியோா் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதில் நெற்றிப் பகுதியில் பலத்த காயமடைந்ததாகக் கூறப்படும் எம்.பி. பிரதாப் சந்திர சாரங்கியை சக எம்.பி.க்கள் சக்கர நாற்காலியில் அமரவைத்தபடி அழைத்துச் சென்று, ஆம்புலன்ஸ் மூலம் ராம் மனோகா் லோஹியா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா்.
பாஜக எம்.பி.க்கள் காயமடைந்ததற்கு ராகுல் காந்தி தள்ளியதே காரணம் என்று பாஜக எம்.பி.க்கள் குற்றஞ்சாட்டினா். ஆனால் இந்தக் குற்றச்சாட்டை காங்கிரஸ் எம்.பி.க்கள் மறுத்தனா். பாஜகவினரின் குற்றச்சாட்டை காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தியும் மறுத்தாா். இந்தக் கைகலப்பு தொடா்பாக எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மீது பாஜக எம்.பி.க்கள் தரப்பிலும், மல்லிகாா்ஜுன காா்கேயை தாக்கியதாக பாஜக எம்.பி.க்கள் மீது காங்கிரஸ் தரப்பிலும் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.