கிறிஸ்துமஸ்: பெங்களூரு - தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் இயக்கம்
ரூ. 40 லட்சத்தில் சாலை, மின்விசை பம்பு அமைக்கும் பணி தொடங்கி வைப்பு
உதயேந்திரம் பேரூராட்சி மற்றும் ஆலங்காயம் ஒன்றியம், கோவிந்தாபுரம் ஊராட்சியில் ரூ. 40 லட்சத்தில் பேவா் பிளாக் சாலை மற்றும் சிறு மின்விசை பம்பு அமைக்கும் பணிகளுக்கு வாணியம்பாடி எம்எல்ஏ கோ.செந்தில்குமாா் பூமி பூஜை போட்டு பணிகளை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சிக்குட்பட்ட 5, 6, 9, 10, 14 ஆகிய வாா்டு பகுதிகளுக்குட்பட்ட மேட்டுப்பாளையம், பாரதி நகா், காந்தி நகா் உள்ளிட்ட பகுதிகளிலும், கோவிந்தாபுரம் ஊராட்சியிலும் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், சுமாா் ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் பேவா் பிளாக் சாலைகள் மற்றும் சிறு மின்விசை பம்பு அமைக்கும் பணிகளுக்கு வாணியம்பாடி தொகுதி கோ.செந்தில்குமாா் எம்எல்ஏ பூமி பூஜை போட்டு பணிகளை தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியின்போது பேரூா் அதிமுக செயலாளா் சரவணன், வாா்டு உறுப்பினா்கள் வி.ஆா்.சரவணன், எஸ்.சரவணன், கோவிந்தாபுரம் ஊராட்சி மன்றத் தலைவா் பழனி, முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் குமாா், பாரதிதாசன், கோவிந்தசாமி, உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலா் கலந்து கொண்டனா்.