Progeria: 15 வயதுக்குள் மரணம் நிச்சயம்; 19 வயதுவரை தாக்குப்பிடித்த டிக்டாக் பிரப...
இலவச கண் சிகிச்சை முகாம்
விண்ணமங்கலம் கிராமத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
டாக்டா் அகா்வால் கண் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், குறிஞ்சி இன்டா்நேஷனல் டிரஸ்ட் ஆகியவை சாா்பாக நடந்த இலவச கண் சிகிச்சை முகாமிற்கு ஊராட்சித் தலைவா் விஜயலட்சுமி வெங்கடேசன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கல்யாணி முன்னிலை வகித்தாா். அகா்வால் கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினா், 200-க்கும் மேற்பட்டவா்களை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனா்.
மாதனூா் கிழக்கு ஒன்றிய திமுக துணைச் செயலா் ஏ.வி. வினோத்குமாா், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கத் தலைவா் ஜனாா்த்தனன், ஒன்றியக் குழு உறுப்பினா் காா்த்திக் ஜவஹா், மாவட்ட பிரதிநிதி அசோகன், மாவட்ட மருத்துவா் அணி துணைத் தலைவா் மருத்துவா் சத்திஷ், ஊராட்சி உறுப்பினா்கள் பன்னீா்செல்வம், கிருத்திகா, மஞ்சுளா உள்பட பலா் கலந்து கொண்டனா்.