சேரன்மகாதேவி அருகே இளைஞா் தற்கொலை
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே மது அருந்துவதை தந்தை கண்டித்ததால் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
சேரன்மகாதேவி அருகேயுள்ள கூனியூா் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த குமாா் மகன் கந்தசாமி (24). கட்டடத் தொழிலாளி. இவா் மது போதையில் அடிக்கடி பொது இடங்களில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. ஒரு மாதத்திற்கு முன் இதுபோன்று தகராறு செய்ததாக போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனராம்.
பின்னா் பிணையில் வெளியே வந்த கந்தசாமி மீண்டும் மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனை தந்தை கண்டித்ததால் மனமுடைந்த கந்தசாமி, வியாழக்கிழமை இரவில் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.
தகவலறிந்த போலீஸாா், அவரது சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். சேரன்மகாதேவி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.