Mysore Sandal Soap: வரலாறு காணாத வருமானம்; ரூ.108 கோடியை அரசுக்கு ஈவுத்தொகையாக வ...
மேட்டூர் அணை: காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு குறைப்பு
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் லேசான மழை பெய்து வருவதல் சனிக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 13004 கன அடியிலிருந்து வினாடிக்கு 2938 கன அடியாக சரிந்துள்ளது.
இதையும் படிக்க |தேடப்பட்டுவந்த 2 மாவோயிஸ்ட்டுகள் சரண்!
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1000 கன அடியிலிருந்து வினாடிக்கு 500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 300 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர்மட்டம் 119.02 அடியிலிருந்து 119.12 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 92.07 டிஎம்சியாக உள்ளது.