செய்திகள் :

திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து

post image

திருப்பூர்: திருப்பூர் மணியக்காரம்பாளையம் பகுதியில் இயங்கி வரும் பனியன் நிறுவனத்தில் சனிக்கிழமை காலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் மணியக்காரம்பாளையம் பகுதியில் தனியாருக்கு செந்தமான பனியன் நிறுவனம் ஒன்றில் சனிக்கிழமை காலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென நிறுவனத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பரவி எரிய தொடங்கியது.

இதையும் படிக்க |புதுச்சேரியில் 800 கிலோ எடையில் "கிங்காங்" சாக்லெட் சிற்பம்!

தீ விபத்து குறித்து உடனடியாக தீயணைப்பு மற்றும் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போராடி வருகின்றனர்.

தீ விபத்தை அடுத்து பணியில் இருந்த ஊழியர்கள் அவசர அவசரமாக வெளியேறியதால் நல்வாய்ப்பாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த துணி பண்டல்கள் தீப்பிடித்து எரிவதால் எழுந்த கரும்புகையால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

நெல்லையில் மருத்துவக் கழிவுகள் கொட்டிய லாரி பறிமுதல்

திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் லாரி பறிமுதல் செய்யப்பட்டு லாரி ஓட்டுநர் மற்றும் உரிமையாளரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.திருநெ... மேலும் பார்க்க

வகுப்பறையில் மாணவியை பாம்பு கடித்த விவகாரம்! அரசு நடவடிக்கை!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்திலுள்ள அரசு உதவிபெறும் பள்ளி வகுப்பறையில் எழாம் வகுப்பு மாணவியை விஷப்பாம்பு கொத்தியதைத் தொடர்ந்து அரசு விசாரணையைத் துவங்க உத்தரவிட்டுள்ளது.திருவனந்தபுரத்திலுள்ள நெ... மேலும் பார்க்க

அனைத்து மக்களுக்கும் தலா ரூ.6000 நிவாரணம் வழங்க வேண்டும்: சி.வி. சண்முகம்

விழுப்புரம்: ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவித பாகுபாடும் காட்டாமல் ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலரும் மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி. சண்மு... மேலும் பார்க்க

கோயிலின் உணவு இயந்திரத்தில் துப்பட்டா சிக்கி பெண் பலி!

மத்தியப் பிரதேசம்: மஹாகாலேஸ்வர் கோயிலின் உணவுக்கூடத்திலுள்ள இயந்திரத்தில் துப்பட்டா சிக்கியதில் கழுத்து நெறிக்கப்பட்டு பெண் ஒருவர் பலியானார்.உஜ்ஜயின் மாவட்டத்திலுள்ள மஹாகாலேஸ்வர் கோயிலின் உணவுக்கூடத்த... மேலும் பார்க்க

சதி செய்கிறார் அண்ணாமலை: திமுக மாணவரணி குற்றச்சாட்டு

கோவையின் அமைதியை சீர்குலைக்க சதி செய்கிறார் பாஜக தலைவர் அண்ணாமலை என திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.இதுதொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:கோவையில் எல்ல... மேலும் பார்க்க

ஆர்-வாலட் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் 3% சலுகை!

பயணிகள் முன்பதிவில்லா டிக்கெட்டுகளை ஆர்-வாலெட் பயன்படுத்தி டிக்கெட் எடுத்தால் 3% சலுகை வழங்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க, முன்பதிவில்லா பெட்டிகளில் பயணி... மேலும் பார்க்க