Mysore Sandal Soap: வரலாறு காணாத வருமானம்; ரூ.108 கோடியை அரசுக்கு ஈவுத்தொகையாக வ...
நேபாளத்தில் நிலநடுக்கம்!
நேபாளத்தில் இன்று(சனிக்கிழமை) காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆகப் பதிவாகியுள்ளது.
தேசிய நில அதிர்வு மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள தகவலில்,
'இந்திய நேரப்படி சனிக்கிழமை அதிகாலை 3.59 மணியளவில் நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 10 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது' என்று தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | ஜெய்ப்பூர் தீ விபத்தில் பலி 13 ஆக உயர்வு!
இந்த நிலநடுக்கத்தால் பொருள் சேதமோ, உயிர்சேதமோ எதுவும் ஏற்படவில்லை.
முன்னதாக கடந்த டிச. 19 ஆம் தேதியும்(வியாழக்கிழமை) நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இது ரிக்டர் அளவில் 4.1 ஆகப் பதிவானது.