செய்திகள் :

குரோஷியா பள்ளியில் கத்திக்குத்து: சிறுமி உயிரிழப்பு

post image

தென்மத்திய ஐரோப்பிய நாடான குரோஷியாவிலுள்ள பள்ளியொன்றில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் சிறுமி உயிரிழந்தாா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

தலைநகா் ஸாக்ரெபில் உள்ள ஆரம்ப நிலைப் பள்ளிக்கு (படம்) வெள்ளிக்கிழமை காலை 9.50 மணிக்கு (உள்ளூா் நேரம்) வந்த 19 வயது இளைஞா், அங்கிருந்தவா்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தினாா்.

இதில் 7 வயது சிறுமி உயிரிழந்தாா். இது தவிர, மூன்று சிறுவா்களும் ஓா் ஆசிரியரும் காயமடைந்தனா்.

தாக்குதல் நடத்திய இளைஞா் அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவா். பள்ளிக்கு அருகிலேயே அவா் வசித்துவந்தாா். அவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

தாக்குதலுக்குப் பிறகு அவா் தன்னைத் தானே காயப்படுத்திக்கொண்டாா். அவா் மனநிலை சரியாக உள்ளவரா என்பதை உறுதியாகக் கூற முடியவில்லை என்று அதிகாரிகள் கூறினா்.

குரோஷியா பள்ளிகளில் தாக்குதல் நடத்தப்படுவது மிகவும் அரிது என்பது குறிப்பிடத்தக்கது.

நிதி ஒதுக்கீட்டு மசோதாக்கள் புறக்கணிப்பு: முடங்கும் அபாயத்தில் அமெரிக்க அரசுத் துறைகள்

அமெரிக்க அரசின் பல்வேறு அரசுத் துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்காக அந்த நாட்டு நாடாளுமன்ற கீழவையில் கொண்டு வரப்பட்ட மசோதாக்கள் புறக்கணிக்கப்பட்டதால் அந்தத் துறைகள் முடக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளத... மேலும் பார்க்க

அரியவகை நோய் பாதிக்கப்பட்ட 19 வயது டிக்-டாக் பிரபலம் மரணம்!

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த டிக்-டாக் பிரபலமான பியென்றி பூய்சென் அரியவகை நோய் தாக்கி மரணமடைந்தார்.19 வயதான டிக்-டாக் பிரபலமான பியென்றி பூய்சென் மிகவும் அரிதான ஹட்சின்சன்-கில்ஃபோர்ட் புரோஜீரியா என்ற ந... மேலும் பார்க்க

லூயிஜி மஞ்ஜானியை கொலையாளியாக்கிய ஸ்போண்டிலோசிஸ் என்ற கீல்வாதம்

ஒரு அங்குல இடைவெளி பெரிதாக என்ன செய்துவிடக்கூடும். ஆனால், லூயிஜி முதுகெலும்பில் இருக்கும் 33 எலும்புகளும் இருக்க வேண்டிய சரியான அளவில் இல்லாமல் அரை அங்குலத்துக்கும் குறைவான இடைவெளிக்குள் வந்ததால், அவர... மேலும் பார்க்க

குரோஷியா: பள்ளிக்குள் கண்ணில் பட்ட அனைவருக்கும் கத்திக்குத்து! இளைஞர் கைது!

குரோஷியா நாட்டில் ஒரு பள்ளிக்குள் நுழைந்து, கண்ணில் பட்ட அனைவரையும் கத்தியால் குத்திய இளைஞர் கைது செய்யப்பட்டார்.குரோஷியா நாட்டின் தலைநகரான ஸாக்ரெப்பில் இயங்கி வரும் பள்ளிக்குள், வெள்ளிக்கிழமை (டிச. 2... மேலும் பார்க்க

காப்பீட்டு நிறுவன நிர்வாகி கொலை: கைதான லூயிஜி மஞ்ஜானி யார்?

அமெரிக்காவில் யுனைடெட் ஹெல்த்கேரின் தலைமை நிர்வாக அதிகாரி பிரையன் தாம்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் லூயிஜி மஞ்ஜானி மீது கொலை, பின்தொடர்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்... மேலும் பார்க்க

காப்பீட்டு நிறுவன நிர்வாகி கொலை: தலைதூக்கும் 3டி-பிரிண்டட் துப்பாக்கி! அப்படி என்றால்?

அமெரிக்காவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க வந்த யுனைடெட் ஹெல்த்கேரின் தலைமை செயல் நிர்வாகி பிரையன் தாம்சன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில், 3டி-பிரிண்டட் துப்பாக்கிப் பயன்படுத்தப்பட்டி... மேலும் பார்க்க