குரோஷியா: பள்ளிக்குள் கண்ணில் பட்ட அனைவருக்கும் கத்திக்குத்து! இளைஞர் கைது!
குரோஷியா நாட்டில் ஒரு பள்ளிக்குள் நுழைந்து, கண்ணில் பட்ட அனைவரையும் கத்தியால் குத்திய இளைஞர் கைது செய்யப்பட்டார்.
குரோஷியா நாட்டின் தலைநகரான ஸாக்ரெப்பில் இயங்கி வரும் பள்ளிக்குள், வெள்ளிக்கிழமை (டிச. 20) காலை 9.50 மணியளவில் நுழைந்த இளைஞர் ஒருவர், கண்ணில் பட்டவர்களையெல்லாம் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார்.
இந்தத் தாக்குதலில் ஓர் ஆசிரியர் உள்பட பல மாணவர்களும் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய இளைஞர் கைது செய்யப்பட்டார்.
இந்த தாக்குதலில் பள்ளி மாணவர் பலியானதாக அந்நாட்டு ஊடகங்கள் கூறுவதை, காவல்துறையினர் மறுத்து வருகின்றனர். பள்ளிக்குள் இருந்த மாணவர்கள் பலரும் அலறியடித்துக் கொண்டு ஓடும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிக்க:காப்பீட்டு நிறுவன நிர்வாகி கொலை: கைதான லூயிஜி மஞ்ஜானி மீது புதிய குற்றச்சாட்டுகள்