செய்திகள் :

மகாராஷ்டிரா: இலாகா ஒதுக்கீட்டில் இழுபறி; பேச்சுவார்த்தையில் இறங்கிய பாஜக தலைமை!

post image

மகாராஷ்டிராவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 39 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு முதல்வர் பதவியை ஏக்நாத் ஷிண்டே விட்டுக்கொடுக்க மறுத்ததால், புதிய அரசு பதவியேற்பதில் தாமதம் ஏற்பட்டது. அதன் பிறகு புதிய அரசு 5ம் தேதி பதவியேற்றது. அமைச்சர்கள் பதவியேற்பதிலும் தாமதம் ஏற்பட்டது. நீண்ட இழுபறிக்கு பிறகு டெல்லி தலைமை தலையிட்டு பிரச்னையை தீர்த்த பிறகு கடந்த ஞாயிற்றுக்கிழமை புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். தற்போது சட்டமன்றத்தின் குளிர்காலக்கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இக்கூட்டத்தொடரில் அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சட்டமன்றக் கூட்டம் இன்றோடு முடிவுக்கு வருகிறது. இதனால் சட்டமன்றக் கூட்டம் அமைச்சர்களுக்கு இலாகா இல்லாமலேயே முடிவுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தங்களுக்கு உள்துறை, நகர்ப்புற மேம்பாட்டுத்துறையை கேட்டுக்கொண்டிருக்கிறார். ஆனால் வழக்கமாக இந்த துறையை பா.ஜ.க தனது வசம் வைத்திருக்கும். அதுவும் உள்துறை தனக்கு வேண்டும் என்பதில் ஏக்நாத் ஷிண்டே பிடிவாதமாக இருக்கிறார். இதனால் புதிய அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னைக்கு டெல்லி பா.ஜ.க தலைமையால் மட்டுமே தீர்வு காண முடியும் என்று மகாராஷ்டிரா பா.ஜ.க தலைவர்கள் கருதுகின்றனர். துணை முதல்வர் அஜித் பவார் தங்களது கட்சிக்கு நிதித்துறை மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை ஒதுக்கவேண்டும் என்று கேட்டு வருகிறார்.

ஆனால் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கட்சிக்கு பொதுப்பணித்துறையும், நகர்ப்புற மேம்பாட்டுத்துறையும் வழங்கப்படும் என்று பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவித்தன. இது குறித்து பா.ஜ.க தலைவர் ஒருவரிடம் பேசியபோது, ``டெல்லியில் கடந்த ஒரு வாரமாக பாராளுமன்ற கூட்டம் நடந்து வந்தது. அதனால் அமைச்சர்கள் இலாகா தொடர்பான பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. பாராளுமன்ற கூட்டம் முடிந்துவிட்டதால் ஓரிரு நாளில் டெல்லி பா.ஜ.க தலைமை இதில் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னையை தீர்த்து வைப்பார்கள்" என்று நம்பிக்கை தெரிவித்தார். விரைவில் இரு துணை முதல்வர்களான ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் மற்றும் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் டெல்லி செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொறுமை காக்க ஷிண்டே கோரிக்கை!

மகாராஷ்டிராவில் அமைச்சர் பதவி கிடைக்காத விரக்தியில் சில சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் இருக்கின்றனர். அவர்கள் கட்சிக்கு எதிராக பேசி வருகின்றனர். முந்தைய அரசில் அமைச்சராக இருந்த சகன் புஜ்பாலுக்கு தற்போது அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை. இதனால் அவர் மிகவும் அதிருப்தியில் இருக்கிறார். புஜ்பால் ஆதரவாளர்கள் சில இடங்களில் போராட்டம் நடத்தினர். இதனால் அமைச்சர் பதவி கிடைக்காத எம்.எல்.ஏ.க்கள் பொறுமை காக்கவேண்டும் என்று ஏக்நாத் ஷிண்டே கேட்டுக்கொண்டுள்ளார். அமைச்சர் பதவி கிடைக்காத எம்.எல்.ஏ.க்கள் பிரகாஷ் சுர்வே உட்பட 3 பேர் ஏக்நாத் ஷிண்டேயை சந்தித்து தங்களது அதிருப்தியை தெரிவித்தனர். அவர்களது குறையை கேட்டுக்கொண்ட பிறகு ஏக்நாத் ஷிண்டே அளித்த பேட்டியில், '' அமைச்சர் பதவி கிடைக்காத எம்.எல்.ஏ.க்கள் பொறுமையுடனும், விசுவாசத்துடனும் காத்திருக்கவேண்டும்.

அவர்களுக்கு அடுத்த முறை வாய்ப்பு கொடுக்கப்படும். சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் யாரும் அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்பதற்காக கட்சியை விட்டு வெளியேற மாட்டார்கள்'' என்று தெரிவித்தார். அமைச்சர் பதவி கிடைக்காத எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்துவதில் ஏக்நாத் ஷிண்டே மிகவும் சவாலை சந்தித்து வருகிறார். சிவசேனாவிற்கு 57 எம்.எல்.ஏ.க்கள் இருக்கின்றனர். ஆனால் அக்கட்சிக்கு 12 அமைச்சர் பதவி மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.

Senthil Balaji : `பிணையில் வெளிவந்த செந்தில் பாலாஜி அமைச்சரானது மிகப்பெரிய தவறு' - உச்ச நீதிமன்றம்

வேலை வாங்கித் தருவதாக பணம் வாங்கி, பண மோசடி செய்யப்பட்டதாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த செந்தில் பாலாஜியை மீண்டும் அமைச்சராக பணியமர்த்தியது 'மிகப் பெரிய தவறு' என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. நீ... மேலும் பார்க்க

'மழைக்கு கூட வெளியே வராதவர் விஜய், ஆனால் எங்களைப் பார்த்து..!' - தமிழிசை சௌந்தரராஜன் எக்ஸ்க்ளூஸிவ்

"அதானிவிவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு பா.ஜ.க, பா.ம.க ஆதரவளிக்குமா என முதல்வர் ஸ்டாலின் கேள்வியெழுப்பியிருக்கிறாரே?""அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், அவர்கள் பார்த்துக்கொள்வா... மேலும் பார்க்க

'கோவையில் தீவிரவாதிகள் டார்கெட் செய்த ஏழு இடங்கள்' - அண்ணாமலை `பகீர்'

கோவை மாவட்டத்தில் 1998ம் ஆண்டு நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான பாஷா கடந்த சில நாள்களுக்கு முன்பு உயிரிழந்தார். அவரின் உடலை ஊர்வலமாக எடுத்து செல்ல அனுமதி வழங்கியதற்கு பாஜக எதி... மேலும் பார்க்க

`சினிமா தியேட்டராக மாறிய மு.கருணாநிதி அரங்கம்' - தஞ்சாவூர் மாநகராட்சி சர்ச்சை!

தஞ்சாவூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய பேருந்து நிலையம் பின்புறத்தில் உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில், சுமார் 62 கோடி ரூபாய் மதிப்பில் கான்ஃபரன்ஸ் ஹால் கட்டப்பட்டது. ‘... மேலும் பார்க்க