செய்திகள் :

'கோவையில் தீவிரவாதிகள் டார்கெட் செய்த ஏழு இடங்கள்' - அண்ணாமலை `பகீர்'

post image

கோவை மாவட்டத்தில் 1998ம் ஆண்டு நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான பாஷா கடந்த சில நாள்களுக்கு முன்பு உயிரிழந்தார். அவரின் உடலை ஊர்வலமாக எடுத்து செல்ல அனுமதி வழங்கியதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதைக் கண்டித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் கோவை விகேகே மேனன் சாலையில் கருப்பு பேரணியில் ஈடுபட முயற்சித்தனர். அப்போது அண்ணாமலை பேசும்போது,

அண்ணாமலை

“2022ம் ஆண்டு மனித வெடி குண்டாக மாறி கோவையை தாக்க திட்டமிட்டனர். மக்கள் அதிகம் கூடும் ஒரு பிரபல துணிக்கடையில் காரை நிறுத்தி சேதம் ஏற்படுத்தத் திட்டமிட்டனர். கோயிலை தாண்டும்போது  வெடித்து இறந்துவிட்டார். 2022 பிப்ரவரி மாதம் உமர் பரூக் என்பவன் தலைமையில் சத்தியமங்கலம் காட்டில் இதற்கான சதி திட்டத்தை தீட்டினர். அவர்களின் இரண்டாவது டார்கெட் போலீஸ் கமிஷனர் ஆபீஸ். ஏழு நாள் ஏழு இடங்களை தாக்குவதற்கு திட்டமிட்டனர்.

இது தீவிரவாத தாக்குதல் இல்லை என தமிழக காவல்துறை கூறுகிறது. நானும் அதே காக்கியை போட்டவன். காவல்துறை இனியாவது நேர்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். 1998 கோவை குண்டு வெடிப்புக்காக பாஷா மைசூர் சென்று வெடி குண்டு வாங்கினார். 50 பேர் இறந்து, 250  பேர் காயமடைந்தனர். அந்த பாஷாவை ‘அப்பா’ என்று சீமான் கூறுகிறார். உயிரிழந்த யாருக்கும் அப்பா இல்லையா.

பாஜக பேரணி

ஓட்டு பிச்சை எப்படி எடுக்க வேண்டும் என உங்களிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும். திருமாவளவன் பாஷாவை, ‘தியாகி.. வீரவணக்கம்’ என்று சொல்கிறார். இதைவிட மோசமாக ஓட்டு பிச்சை யாராலும் எடுக்க முடியாது. இதே பாஷா 2003 ம் ஆண்டு கோவை நீதிமன்றத்தில், ‘நரேந்திர மோடி கோவை வந்தால் கொன்றுவிடுவேன்.’ என கூறியதை மறக்க கூடாது.

பாஜக அமைதியை விரும்பும் கூட்டம். இது மாற்றத்துக்கான நேரம். அனைத்து மக்களும் பாதுகாப்பாக இருப்பதற்கு சிறுபான்மை மக்களும் தங்களிடம் ஓட்டு பிச்சை எடுக்க வருபவர்களை விரட்ட வேண்டும். கோவைக்கு என்ஐஏ அலுவலகம் அமைப்பதற்கு மத்திய அரசு பரிசீலனையில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாஜகவினர் மீது ஒடுக்குமுறை செலுத்துகிறார்கள்.

அண்ணாமலை

இந்த வீரத்தை சத்தியமங்கலத்தில் சதி திட்டம் போட்ட தீவிரவாதிகள் மீது ஏன் காட்டவில்லை. கோவையில் இந்தமுறை வானதி அக்காவுடன் இணைந்து ஆறு எம்எல்ஏ-க்களையாவது சட்டசபைக்கு அனுப்ப வேண்டும்.” என்றார். இதையடுத்து பேரணியில் ஈடுபட முயன்ற அண்ணாமலை உள்ளிட்ட பாஜக-வினரை கைது செய்து கணபதியில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்தனர்.

Senthil Balaji : `பிணையில் வெளிவந்த செந்தில் பாலாஜி அமைச்சரானது மிகப்பெரிய தவறு' - உச்ச நீதிமன்றம்

வேலை வாங்கித் தருவதாக பணம் வாங்கி, பண மோசடி செய்யப்பட்டதாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த செந்தில் பாலாஜியை மீண்டும் அமைச்சராக பணியமர்த்தியது 'மிகப் பெரிய தவறு' என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. நீ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: இலாகா ஒதுக்கீட்டில் இழுபறி; பேச்சுவார்த்தையில் இறங்கிய பாஜக தலைமை!

மகாராஷ்டிராவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 39 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு முதல்வர் பதவியை ஏக்நாத் ஷிண்டே விட்டுக்கொடுக்க மறுத்ததால், புதிய அரசு பதவியேற்பதில் தாமதம் ஏற்பட்ட... மேலும் பார்க்க

'மழைக்கு கூட வெளியே வராதவர் விஜய், ஆனால் எங்களைப் பார்த்து..!' - தமிழிசை சௌந்தரராஜன் எக்ஸ்க்ளூஸிவ்

"அதானிவிவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு பா.ஜ.க, பா.ம.க ஆதரவளிக்குமா என முதல்வர் ஸ்டாலின் கேள்வியெழுப்பியிருக்கிறாரே?""அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், அவர்கள் பார்த்துக்கொள்வா... மேலும் பார்க்க

`சினிமா தியேட்டராக மாறிய மு.கருணாநிதி அரங்கம்' - தஞ்சாவூர் மாநகராட்சி சர்ச்சை!

தஞ்சாவூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய பேருந்து நிலையம் பின்புறத்தில் உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில், சுமார் 62 கோடி ரூபாய் மதிப்பில் கான்ஃபரன்ஸ் ஹால் கட்டப்பட்டது. ‘... மேலும் பார்க்க