செய்திகள் :

முந்திரிக்காடு டு சந்தனக்காடு : " `எல்லாரும் தனியாவே மாட்டிக்கிட்டுச் சாகறீங்களே?’ | அத்தியாயம் 13

post image
தமிழ்நாடு விடுதலைப்படை... அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இயங்கிய அமைப்பு. இதன் தலைவராக இருந்தவர் தமிழரசன். இவருக்கு வழிகாட்டியாக இருந்தவர், புலவர் கலியபெருமாள். இவரது வாழ்வைத் தழுவிய கேரக்டர்தான், 'விடுதலை பாகம் 1' மற்றும் 'பாகம் 2' திரைப்படங்களில் விஜய் சேதிபதி ஏற்றிருக்கும் பெருமாள் வாத்தியார் கேரக்டர். 1980'களில் வட தமிழ்நாட்டில் தமிழரசன் நிறைய இளைஞர்களை வசீகரித்து இந்த அமைப்புக்கு அழைத்து வந்தார். பிற்காலத்தில் இவர்களில் சிலர் சந்தனக் கடத்தல் வீரப்பனுடன் இணைந்தார்கள். இதைத் தொடர்ந்தே, கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திய சம்பவம் நிகழ்ந்தது. அந்த 2000-மாவது ஆண்டில் ஜூனியர் விகடனில் வெளியான தொடர் இது...

மின்னல் வேகத்தில் பரபரப்பானார்கள். நான் பைக்குகளையும் ரோட்டின் குறுக்கே விட்டார்கள் வேக நடை நடைந்து ரோட்டு வளைவருகே போய் நின்றுகொண்டார்கள். எமன் காத்திருப்பது தெரியாமல் அந்த இருவரும் பைக்கை வளைவில் திருப்புவதற்கு வேகத்தைக் குறைத்தார்கள்.

' தபதப்வென ஓடிப்போய் அவர்களைச் சுற்றிவளைத்தது இந்த எட்டுப் பேர் கும்பல். நின்று நிதானித்து யார்தான் நம்மை மடக்கியது என்று யோசிக்கக்கூட அவர்களுக்கு அவகாசம் தரவில்லை. வண்டியிலிருந்து அவர்களைச் சரித்துக் கீழே தள்ளினான் ஒருவன். இருவரும் எழுந்து ஓடமுயன்றபோது காலில் வெட்டு விழுந்தது. “ ஐயோ! ” என்று அலறியவாறே துடிதுடித்து ரோட்டில் விழ, அடுத்தடுத்த வெட்டுக்கள் கழுத்திலேயே விழுந்தன. நிமிடங்களில் இருவரது தலைகளும் துண்டாகி கீழே விழுந்தன. தூரப் போய் விழுந்த தலைகளை கையில் தூக்கிப் பிடித்து பார்த்து சத்தமாகச் சிரித்தார்கள்.

உடம்பும், தலையும் மாறிவிடக் கூடாதே என் கவலையில் சேட்டின் கழுத்தருகே தலைமை அப்படியே வைத்தார்கள். விக்கிரமனின் தலையைக் கொண்டு போய் அவன் வலதுகையில் கோத்து வைத்தார்கள் அரிவாளில் சொட்டிய ரத்தத்தை துடைக்கக்கூட அவகாசமில்லை அப்படியே அரிவாள்களை பைக்கில் மாட்டிக் கொண்டு, ராமசாமியின் பைக்கையும் எடுத்துக்கொண்டு முந்திரிக்காடுகளை நோக்கி பறந்தார்கள் அலறல் சத்தம் கேட்டு வயல் காட்டு வேலைகளை அப்படியே போட்டுவிட்டு, வேலியோரமாக வந்து நின்று ரோட்டில் நடந்த கொடூரங்களை பார்த்தவர்கள் அப்படியே பேச்சற்று நின்றார்கள். கிளம்பிப் போன பிறகுதான் அவர்களுக்கு உயிரே திரும்ப வந்தது பிரமை பிடித்தவர்கள் போல் அவர்கள் தண்டகாரன் குப்பத்துக்கு ஓடினார்கள் - நடவு வேலையையும், மாடுகளையும், ஏர்களையும் விட்டுவிட்டு!

அய்யூர் கிராமத்தை ஒட்டிய முந்திரிக்காடு.... இருபது நாள் இடைவெளிக்கு பிறகு இளவரசன் கோஷ்டியினர் அன்றுதான் மீண்டும் ஒன்று கூடினர். எல்லோரது முகமும் பயத்தால் வெளிறிப்போய் இருந்தது. தூக்கம் இல்லாமல், சாப்பாடு இல்லாமல், குளிக்காமல் துரத்தல் களிலிருந்து தப்பி ஓடிக்கொண்டு இருக்கும் களைப்பு தெரிந்தது.

“ மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடிங்கிற மாதிரி ஆயிடுச்சு நம்ம நிலைமை. போலீஸ்காரங்க வேற படைபடையா முந்திரிக்காடுகள்ல புகுந்து தேடறாங்க. தோப்புல புகுந்து அக்குவேறே ஆணி வேறேன்னு அலசறாங்க. நம்ம ஆளுங்க ஏழு பேர் இதுவரைக்கும் மாட்டிக்கிட்டாங்க. இந்த ஆதி வேறே ரத்த வெறியோட அலையறான். சேட்டையும், விக்கிரமனையும் வெட்டிப் போட்டும் கூட அவன் வெறி அடங்கலை. இளவரசன் தலைதான் அடுத்த குறினு சொல்லிக்கிட்டுத் திரியறானாம். ' '


“ போலீஸ் கையில சிக்கறது கூட இப்போதைக்கு ஆபத்தில்லை... எப்பாடு பட்டாவது ஆதிக்கு ஒரு முடிவு கட்டியாகணும். இல்லையின்னா நாம நிம்மதியாக இருக்க முடியாது. "

ஆலோசனைகளின் குறுக்கே புகுந்து ஒருவன் பேசினான். " அவன் இருந்தவங்கள்லேயும் நாலு பேர் போலீஸ்ல சிக்கிக்கிட்டாங்க. இப்போ மிஞ்சி இருக்கிறது ஒருசிலபேர்தான். எல்லாருமே போலீஸுக்குப் பயந்து தனித்தனியா சுத்தறானுங்க. அரியலூர் மார்க்கெட்டிங் கமிட்டிக்கு பின்னால இருக்கிற இருட்டான இடத்துல ராத்திரி யில அடிக்கடி கூடிப் பேசிக்கிறானுங்க. "


" எல்லோரையும் தீர்த்துடணும்னுகூட அவசியமில்லை. ஆதியைக் கழிச்சிட்டா எல்லாரும் அடங்கிடுவானுங்க. "


' அதைச் செய்யுங்க முதல்ல! '' என்றவாறு பிரதானமாக இருந்தவர் எழுந்து போனார். மற்றவர்கள் திட்டமிட ஆரம்பித்தார்கள்.

மறுநாள் இரவு... சீறிவந்த அந்த நான்கு பைக்குகள் அரியலூர் மார்க்கெட்டிங் கமிட்டி வாசலில் நின்றன. சாவியை எடுத்தவாறு அவசர மாக குதித்தவர்கள் கமிட்டி வளாகத்துக்குள் நுழைந்து பக்கவாட்டு சுவரோரமாக வந்து பதுங்கி நின்று எட்டிப்பார்த்தார்கள்.

சுவருக்கு அந்தப்புறமாக முட்புதர் களின் நடுவே தன் பைக்கை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு யாருக்காகவோ காத்திருக்கும் ஆதி தெரிந்தான். இவர்கள் முகத்தில் சந்தோஷம் எட்டிப் பார்த்தது. கண்களால் பேசிக்கொண்டார்கள். சத்தம் காட்டாமல் ஒவ்வொருவராக மதில் சுவரைத் தாண்டிக் குதித்து ஆளுக்கொரு பக்கம் நடந்தார்கள்.

ஒருவளையம் மாதிரி சூழ்ந்துகொண்டு ஆதியைத் தாக்குவது அவர்கள் திட்டம். ஒவ்வொருவரும் அடுத்தவரைப் பார்த்துக் கொண்டு அடிமேல் அடிவைத்து முன்னேறினார்கள்.

இவர்கள் தன்னை நெருங்குவதை ஆதி கவனிக்கவே இல்லை. தனக்கு பத்தடி தூரத்தில் எல்லாரும் வந்து சுற்றி வளைத்த பிறகுதான் அதிர்ந்து போய் பைக்கிலிருந்து எழுந்து நின்றான்.

நொடியில் எல்லாமே புரிந்துவிட்டது ஆதிக்கு. தூரத்து விளக்குகளின் வெளிச்சத்தில் கரிய அவுட்லைனாகத் தெரிந்த அந்த உருவங்கள் இன்னும் நெருங்கின. சுற்றும் முற்றும் பார்த்தபோது தப்பியோட வாய்ப்பே இல்லாதபடி அந்த மனித வளையம் நெருக்கியிருப்பது தெரிந்தது. முதுகுக்குப் பின்னே போன அவர்களின் கைகளில் திடீரென முளைத்த வீச்சரிவாள்கள் சூழலை இன்னும் பயமுறுத்தின. விக்கித்து போய் நின்றான் ஆதி.

" அது என்னடா.... எல்லாரும் தனியாவே மாட்டிக்கிட்டுச் சாகறீங்க? தடுமாறிக் கீழே விழுந்தாக்கூட தூக்கிவிட ஆள் கிடையாம அலையறீங்க...? ஆளே இல்லாத ராமசாமி கோஷ்டிக்கு இப்போ நீதான் தலைவனா?

' மக்களுக்கு விடுதலை வாங்கித் தர்றேன்'னு சொல்லிகிட்டு திரிஞ்ச அவனுக்கு நாங்கதான் விடுதலை தந்தோம். இப்போ உனக்கும் தர்றோம்... போய்ச்சேரு! " கும்பலில் நடுவிலிருந்தவன் சொல்ல, ஆதிக்கு பேசவே வாய்ப்புத் தராமல் அரிவாளைப் பாய்ச்சினான் இன்னொருவன். இடது தோள்பட்டையில் விழுந்த வெட்டில் கை முக்கால்வாசி பிய்ந்து தொங்கியது.

மரண வலியோடு அலறினான் ஆதி! தூரத்து ரோட்டில் போனவர்களில் சிலர் திடுக்கிட்டு இந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தார்கள். ஆனால், அவனைத் துரத்தும் கும்பலைப் பார்த்ததுமே வேக நடை போட்டு வீடுகளுக்கு ஓட ஆரம்பித்தார்கள் அவர்கள்.

ஆதியால் ரொம்ப தூரம் ஓட முடியவில்லை... வெட்டுப்பட்ட இடத்தில் இருந்து ரத்தம் தாரையாக ஒழுகி தரையில் கோடு போட, ஐம்பதடி தூரம் போவதற்குள் கண்கள் இருட்டிக் கொண்டுவர, அப்படியே சரிந்தான். துரத்தியவர்கள் குனிந்து ஆதியின் முகத்தை உற்றுப் பார்த்தார்கள்.

" எமனுக்கே தேதி குறிப்பாருடா எங்க தலைவர். அவருக்கா தேதி வைக்கறீங்க ” என்று ஆக்ரோஷமாகக் கத்தியவாறே ஆதியின் உயிரற்ற உடலை உதைத்தான் ஒருவன். அந்த உதையில் ஆதியின் உடல் ஒருமுறை புரள... தலை மட்டும் புரளாமல் அப்படியே சரிந்து நின்றது.

" இன்னும் கொஞ்சம் ஒட்டிக் கிட்டிருக்கு போலிருக்கு ' ' என்று அடிக்குரலில் சீரியஸாக சொன்ன ஒருவன் ஆதியின் தலையை மட்டும் தனியாக எடுத்துக்கொண்டான். சாவதானமாக மீண்டும் மதில் சுவர் தாண்டிக் குதித்து தங்கள் ' பைக்'குகளை ஆரோகணித்து ஜெயங்கொண்டம் ரோட்டில் விரைந்தார்கள் அவர்கள்! (இன்றுவரை அந்தத் தலையை என்ன செய்தார்கள்... எங்கே வீசியெறிந்தார்கள் என்பது சஸ்பென்ஸாகவே இருக்கிறது.)

எத்தனை எத்தனை கொலைகள்... செத்துப் போன எல்லோருமே ' ஏதோ சாதிக்கப் பிறந்தோம் ' என்ற ரீதியில் மூளைச் சலவை செய்யட்பட்டு வேகத்தோடு வளைய வந்தவர்கள். ராமசாமியை இழந்து அவர் மனைவி ராணி அழுதது போல் எத்தனை பெண்கள் ரத்தக் கண்ணீர் வடிக்கிறார்கள்..!

' ஆண் பிள்ளையைப் பெற்று வளர்த்தால் தள்ளாத நேரத்தில் ஆதரவாக இருந்து சோறு போடுவான் ' என்ற நினைப்பெல்லாம் கண்ணீரில் கரைந்துபோக, கஞ்சிக்கே திண்டாடும் பெற்றோர்கள் எத்தனை பேர்! இந்த வேதனைகள் ஒருபுறமென்றால் போலீஸ் சித்ரவதை இன்னொரு பக்கம்... மகன் செய்த தப்புகளுக்காக சிறைக்குப் போன அப்பன்கள் கதை ஒருபுறம். செத்துப் போன மகனுக்குக் கொள்ளி வைத்து, புண்ணியதானம் செய்து விட்ட பிறகும் கூட தொட்டுத் தொடரும் போலீஸ் உறவு..!

திடீர் திடீரென இரவு நேரங்களில் போலீஸ் வேன் வந்து நிற்கும்.... துப்பாக்கிகளோடு குதித்து வீட்டைச்சுற்றி வளைக்கும். அவர்கள் கேள்விகளால் துளைத்து விடுவர். " செத்துப்போன உன் மகனைத் தெரியும்னு சொல்லிக்கிட்டு எவன் எவனெல்லாம் வீட்டுக்கு வருவான்... சொல்லு? யார் யாருக்கெல்லாம் சோறு போட்டே? எவனையெல்லாம் எங்க கண்ணுல படாம குடிசையில ஒளிச்சு வெச்சிருந்தே? " என்று துப்பாக்கி முனையில் மிரட்டல் கேள்விகள்....

இப்படி ஒரு அவலமான வாழ்க்கையை தங்கள் குடும்பங்களுக்கு தந்துவிட்டு செத்துப்போன, தலைமறைவு வாழ்க்கை வாழ்கிற இந்த இளைஞர்கள் எப்படி இந்த இயக்கத்தால் ஈர்க்கப்பட்டார்கள்? அவர்களை தலையெழுத்தை விதி எப்படி மாற்றி எழுதியது?


மேலும் சலசலக்கும்..!

முந்திரிக்காடு டு சந்தனக்காடு : `கொலை... கோபம்... பழிக்குப் பழி’ | அத்தியாயம் 12

தமிழ்நாடு விடுதலைப்படை... அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இயங்கிய அமைப்பு. இதன் தலைவராக இருந்தவர் தமிழரசன். இவருக்கு வழிகாட்டியாக இருந்தவர், புலவர் கலியபெருமாள். இவரது வாழ்வைத் தழுவி... மேலும் பார்க்க

முந்திரிக்காடு டு சந்தனக்காடு : `இப்போ எதிரேதானே இருக்கோம். ம்.. வெட்டு பார்ப்போம்' | அத்தியாயம் 11

தமிழ்நாடு விடுதலைப்படை... அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இயங்கிய அமைப்பு. இதன் தலைவராக இருந்தவர் தமிழரசன். இவருக்கு வழிகாட்டியாக இருந்தவர், புலவர் கலியபெருமாள். இவரது வாழ்வைத் தழுவி... மேலும் பார்க்க

முந்திரிக்காடு டு சந்தனக்காடு : `முந்திரிக்காடு ஏலமும் பழிக்குப்பழி மோதலும்’ | அத்தியாயம் 10

தமிழ்நாடு விடுதலைப்படை... அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இயங்கிய அமைப்பு. இதன் தலைவராக இருந்தவர் தமிழரசன். இவருக்கு வழிகாட்டியாக இருந்தவர், புலவர் கலியபெருமாள். இவரது வாழ்வைத் தழுவி... மேலும் பார்க்க

முந்திரிக்காடு டு சந்தனக்காடு : `கொள்கை முழக்கத்தோடு துவங்கிய இயக்கம்... அன்று’ | அத்தியாயம் 9

தமிழ்நாடு விடுதலைப்படை... அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இயங்கிய அமைப்பு. இதன் தலைவராக இருந்தவர் தமிழரசன். இவருக்கு வழிகாட்டியாக இருந்தவர், புலவர் கலியபெருமாள். இவரது வாழ்வைத் தழுவி... மேலும் பார்க்க

முந்திரிக்காடு டு சந்தனக்காடு : `தேர்தல் வந்துவிட்டாலே போதும்...’ | அத்தியாயம் 8

தமிழ்நாடு விடுதலைப்படை... அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இயங்கிய அமைப்பு. இதன் தலைவராக இருந்தவர் தமிழரசன். இவருக்கு வழிகாட்டியாக இருந்தவர், புலவர் கலியபெருமாள். இவரது வாழ்வைத் தழுவி... மேலும் பார்க்க

முந்திரிக்காடு டு சந்தனக்காடு : `அடையாளம் தெரிஞ்சாதானே வம்பு...?’ | அத்தியாயம் 7

தமிழ்நாடு விடுதலைப்படை... அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இயங்கிய அமைப்பு. இதன் தலைவராக இருந்தவர் தமிழரசன். இவருக்கு வழிகாட்டியாக இருந்தவர், புலவர் கலியபெருமாள். இவரது வாழ்வைத் தழுவி... மேலும் பார்க்க