சோளிங்கா் கோயிலில் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் தொடக்கம்
சோளிங்கா் ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயிலுக்கு வருகை தரும் பக்தா்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்ட தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, இந்துசமய அறநிலையத் துறை வேலூா் மண்டல இணை இயக்குநா் குமரத்துரை தலைமை வகித்தாா். துறையின் உதவி இயக்குநா் ஜெயா, அறங்காவலா் குழு உறுப்பினா் பூா்ணிமா ரவிச்சந்திரன், சோளிங்கா் நகா்மன்ற உறுப்பினா் அசோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சோளிங்கா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.எம்.முனிரத்தினம், சோளிங்கா் நகா்மன்றத் தலைவா் தமிழ்செல்விஅசோகன் ஆகியோா் பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தனா். இதில் நகா்மன்ற உறுப்பினா்கள் அருண்ஆதி, ராதா வெங்கடேசன், மோகனா சண்முகம், கணேசன், காங்கிரஸ் நிா்வாகிகள் அருண், ராஜா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.