செய்திகள் :

Progeria: 15 வயதுக்குள் மரணம் நிச்சயம்; 19 வயதுவரை தாக்குப்பிடித்த டிக்டாக் பிரபலம் - என்ன நோய் இது?

post image

பீந்திரி பூய்சென் ஒரு டிக்டாக் பிரபலம். தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த இவர், புரோஜிரியா (Progeria) என்ற அரிய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். புரோஜிரியா என்பது ஒரு மரபணு கோளாறு. இதனால் சிறிய வயதிலேயே அதிவேகமாக வயதாகத் தொடங்கும்.

பொதுவாக புரோஜிரியா நோய் இருப்பவர்கள் 15 வயது வரையே வாழ்வார்கள் என்று கூறப்படுகிறது. அரிதாக சிலர் 6 வயதிலேயே இறந்திருக்கின்றனர், சிலர் 20 வயது வரை வாழ்ந்திருக்கின்றனர். இந்த நோயுடன் நீண்டநாட்கள் போராடிய பீந்திரி பூய்சென் 19 வயது வரை வாழ்ந்துள்ளார்.

Beandri Booysen as Child

"ஆழ்ந்த சோகத்துடன் பூந்திரி இறந்ததைத் தெரிவித்துக்கொள்கிறோம். அவர் தென்னாப்பிரிக்காவில் அதிகம் அன்புசெய்யப்பட்ட இன்ஸ்பிரேஷனலான பெண்" என பேஸ்புக்கில் அவரது தாய் மறைவுச் செய்தியைப் பகிர்ந்துள்ளார்.

மறைவுக்கு சில மாதங்களுக்கு முன்புதான் பூந்தியாவுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவர் கிறிஸ்துமஸ் விழாவைக் குடும்பத்துடன் கொண்டாட விரும்பியதாக கூறுகின்றனர்.

எலும்புகளை வலுவிழக்கச் செய்யும் எலும்புப்புரை (osteoporosis), இதயத்தில் இருந்து இரத்தம் வெளியேருவதில் சிக்கல் ஏற்படுத்தும் பெருந்தமனி அடைப்பிதழ்க் குறுக்கம் (aortic stenosis) போன்ற நோய்களும் அவருக்கு இருந்துள்ளது.

Beandri Booysen

வாழக்கையின் ஆயுட்காலமே குறையும் கொடிய நோயுடன் போராடியபோதிலும் வீட்டிலும் மருத்துவமனையிலும் முடங்கிவிடாமல் சமூக வலைதளங்களில் செயல்பட்டு பிரபலமான நபராகினார் பூந்தியா. அவருக்கு டிக்டாக்கில் 2,78,000 ஃபாலோவர்கள் உள்ளனர். டிக்டாக்கில் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் பரப்பும் வீடியோக்களை பதிவேற்றி வந்தார் பூந்தியா. புரோஜிரியா போன்ற கொடிய நோய்களால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் சின்னமாக வாழ்ந்தார்.

Progeria நோய் பற்றி...

புரோஜிரியா நோயை Hutchinson-Gilford Progeria Syndrome (HGPS) என்றும் குறிப்பிடுகின்றனர். பத்து லட்சத்தில் நான்கு குழந்தைகள் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்த நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு அதிவேகமாக வயதாவதுடன், பல துணை நோய்கள் (குறிப்பாக எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள்) வருகின்றன.

புரோஜிரியா உள்ள குழந்தைகளுக்கு தோல் சுருக்கம், முடி உதிர்தல் மற்றும் மூட்டு விறைப்பு போன்ற அறிகுறிகள் தெரியும். குழந்தைகளின் வளர்ச்சி தடைபடும். எடை குறையும்.

புரோஜிரியா இருக்கும் குழந்தைகளுக்கு இருதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.

மூட்டு விறைப்பு மற்றும் தசைகள் வலுவிழப்பதால் நடக்க முடியாமல்கூட போகும்.

இந்த நோய்க்கு மருந்துகள் கிடையாது. ஆனால் சில தெரபிகள் மற்றும் சிகிச்சைகள் எடுத்துக்கொள்வதால் குழந்தைகளின் நலனை கூடுதலாக சிறிது காலம் பேண முடியும்.

National siddha Day 2024: வாழ்வியல் நோய்களுக்கு சித்த மருத்துவத்தில் தீர்வு இருக்கிறதா?

இன்று 8-வது தேசிய சித்த மருத்துவ தினம் (டிசம்பர் 19). ''மார்கழி மாதத்தில் வருகிற ஆயில்ய நட்சத்திரம் அன்று அகத்தியர் பிறந்த நாள் என கணிக்கப்பட்டு, அன்றைய தினமே தேசிய சித்த மருத்துவ தினம் அனுசரிக்கப்பட்... மேலும் பார்க்க

Healthy Cooking : மருந்து சாதம் முதல் அலுப்புக்குழம்பு வரை... குளிர் கால ரெசிப்பிகள்

மழையும் பனியும் சேர்ந்து மிரட்டிக்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் சில ரெசிப்பிக்களை அடிக்கடி உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அந்த ரெசிப்பிகளையும் அதன் பலன்களையும் சொல்கிறார் சித்த மருத்துவர் அ... மேலும் பார்க்க

Paracetamol: `வயதானவர்களுக்கு பாராசிட்டமால் ஆபத்தா?' - ஆய்வு முடிவும் டாக்டரின் விளக்கமும்

மருத்துவரின் ஆலோசனை பெறாமலே, மெடிக்கல் ஷாப்களில் வாங்கக்கூடிய மாத்திரைகளில் முக்கியமான ஒன்று, பாராசிட்டமால். இதை அளவு தெரியாமல் எடுத்துக்கொள்ளும்போது, சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என ஆய்வுகள் எச்சர... மேலும் பார்க்க

`Swiggy, Zomato, Zepto தயவு செய்து இதைச் செய்யாதீர்கள்' - தொழிலதிபர் விடுக்கும் எச்சரிக்கை

வேலை வேலை என பெரும்பாலோனோர் ஓடிக்கொண்டிருக்கும் இந்த நவீன யுகத்தில், `நீங்க நகரவே வேண்டாம் ஆர்டர் பண்ண அடுத்த 10, 20 நிமிடங்களில் உங்க இடத்துக்கே பிரியாணி டு பீட்சா வரைக்கும் எல்லா வகையான சாப்பாடு, கூ... மேலும் பார்க்க

ரத்தத்தில் மைக்ரோ பிளாஸ்டிக்ஸ்; அதிகரிக்கப் போகும் 2 பிரச்னைகள் - எச்சரிக்கும் ஆய்வு!

மனித ரத்தத்தில் மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பதை இரண்டு வருடங்களுக்கு முன்பே ஆய்வு ஒன்று தெரிவித்தது. அந்த ஆய்வறிக்கை மிகப்பெரிய அதிர்வலைகளை அந்த நேரத்தில் ஏற்படுத்தியது. மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் என்பவை ஐந்து மி... மேலும் பார்க்க

Periods: பீரியட்ஸ் வலி ஏன் வருகிறது? ; அந்த வலியை வராமல் தடுக்க முடியுமா? | சந்தேகங்களும் தீர்வும்!

1. பீரியட்ஸ் வலி ஏன் வருகிறது?Periods painமாதவிடாய் நேரத்தில் நம்முடைய கருப்பையானது சுருங்கி, விரிந்து தனக்குள் இருக்கிற உதிரத்தை வெளியேற்ற ஆரம்பிக்கும். இந்த நிகழ்வு 3 முதல் 5 நாள்கள் வரை நிகழும். கர... மேலும் பார்க்க