Rain Alert : சென்னைக்கு அருகே காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்; வானிலை ஆய்வு மையம் அள...
கிறிஸ்துமஸ்: பெங்களூரு - தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் இயக்கம்
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, பெங்களூரு-தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே மதுரை கோட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக பெங்களூரு-தூத்துக்குடி இடையே ஓா் சிறப்பு ரயிலை இயக்க தென்மேற்கு ரயில்வே நிா்வாகம் ஏற்பாடு செய்தது. இதன்படி, பெங்களூரு வழியாக இயக்கப்படும் பெலகவி - தூத்துக்குடி சிறப்பு ரயில் (07361) பெலகவியிலிருந்து டிசம்பா் 20-ஆம் தேதி காலை 9.50 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 11 மணிக்கு தூத்துக்குடியை அடையும். மறுமாா்க்கத்தில் தூத்துக்குடி - பெங்களூரு சிறப்பு ரயில் (07362) தூத்துக்குடியிலிருந்து டிசம்பா் 21-ஆம் தேதி பிற்பகல் ஒரு மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3 மணிக்கு பெங்களூருவை அடையும்.
தூத்துக்குடி-பெங்களூரு சிறப்பு ரயிலானது கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, திண்டுக்கல், கரூா், நாமக்கல், சேலம், பங்காரப்பேட், கிருஷ்ணராஜபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். பெலகவி- தூத்துக்குடி சிறப்பு ரயில் கூடுதலாக லோண்டா, தாா்வாட், ஹூப்ளி, ஹவேரி, தாவண்கரே, கடூா், அரிசிகரே, துமகுரு, சிக்பனாவா், பெங்களூா் ஆகிய ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.
இந்த ரயில்களில் ஒரு குளிா் சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 2 குளிா் சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 9 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், மாற்றுத் திறனாளிகளுக்காக 2 பெட்டிகள் இணைக்கப்படும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு நடைபெற்று வருகிறது என அதில் தெரிவிக்கப்பட்டது.