இந்த பயணம் இந்தியா-குவைத் தொடர்பை மேலும் வலுப்படுத்தும்: பிரதமர் மோடி
Rain Alert : சென்னைக்கு அருகே காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்; வானிலை ஆய்வு மையம் அளித்த தகவல் என்ன?
ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.
தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவிவந்த நிலையில், அது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்துக்கு தெற்கே 450 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு வடகிழக்கே 370 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது என்றும் அடுத்த 24 மணி நேரத்தில் 5 கி.மீ வேகத்தில் வடக்கு- வடகிழக்கு திசையை நோக்கி நகரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது.
இதனால் டிசம்பர் 25-ஆம் தேதிவரை மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் காணப்படும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.