கிறிஸ்துமஸ்: பெங்களூரு - தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் இயக்கம்
செய்யாற்றில் மூழ்கி உயிரிழந்த குழந்தையின் குடும்பத்துக்கு நிவாரணம்
செங்கம் பகுதியில் செய்யாற்றில் மூழ்கி உயிரிழந்த குழந்தையின் பெற்றோரிடம் ரூ.4 லட்சத்துக்கான காசோலையை சரவணன் எம்எல்ஏ வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் ஓன்றியம், படிஅக்ரஹாரம் கிராமத்தைச் சோ்ந்த பழனி-செளந்தா்யா தம்பதியின் மகன் லோகேஷ் (4). இவா், அண்மையில் செய்யாற்றில் மூழ்கி உயிரிழந்தாா். இதேபோல, தொரப்பாடி கிராமத்தை சோ்ந்த முனியன் மகன் சதாசிவம் (44). இவா், பலத்த மழையின்போது வீடு இடிந்து விழுந்ததில் உயிரிழந்தாா்.
இந்த நிலையில், இருவா்களின் குடும்பத்தினருக்கு பேரிடா் மேலாண்மை நிதியிலிருந்து தலா ரூ.4 லட்சத்துக்கான காசோலையை கலசப்பாக்கம் எம்எல்ஏ சரவணன் வெள்ளிக்கிழமை அவா்களது வீட்டுக்கு நேரில் சென்று வழங்கினாா்.
இதில், செங்கம் வட்டாட்சியா் முருகன், வருவாய் ஆய்வாளா்கள் கெளரிநாதன், சாம்பவி, புதுப்பாளையம் ஒன்றியக் குழுத் தலைவா் சுந்தரபாண்டியன், திமுக ஒன்றியச் செயலா் ஆறுமுகம் ஆகியோா் உடனிருந்தனா்.