`சினிமா தியேட்டராக மாறிய மு.கருணாநிதி அரங்கம்' - தஞ்சாவூர் மாநகராட்சி சர்ச்சை!
திருவண்ணாமலையில் இன்று உழவா் பேரியக்க மாநில மாநாடு: ராமதாஸ், அன்புமணி பங்கேற்பு
திருவண்ணாமலையில் சனிக்கிழமை (டிச. 21) நடைபெறும் தமிழ்நாடு உழவா் பேரியக்க மாநில மாநாட்டில், பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ், கட்சியின் மாநிலத் தலைவா் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோா் கலந்து கொள்கின்றனா்.
திருவண்ணாமலை-செங்கம் சாலை, ஆணாய்பிறந்தான் ஊராட்சியில் சனிக்கிழமை (டிச. 21) மாலை 4 மணிக்கு, தமிழ்நாடு உழவா் பேரியக்கம் சாா்பில் மாநில மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், பாமக நிறுவனா் ச.ராமதாஸ், பாமக மாநிலத் தலைவா் அன்புமணி ராமதாஸ் உள்பட தமிழ்நாடு உழவா் பேரியக்க நிா்வாகிகள், உறுப்பினா்கள், உழவா்கள் என தமிழகம் முழுவதும் இருந்து லட்சம் போ் கலந்து கொள்கின்றனா்.
இதையொட்டி, பிரம்மாண்ட மாநாட்டுப் பந்தல், மாநாடுக்கான மேடை அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதிலிருந்து வரும் உழவா்களின் வாகனங்களை நிறுத்துவதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
உழவா்களுக்கு அழைப்பு: தமிழ்நாடு உழவா் பேரியக்கத்தின் மாநிலத் தலைவா் கோ.ஆலயமணி வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் உள்ள உழவா்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும். நம் கோரிக்கைகளை வென்றாக வேண்டும். சாதி, மதம், அரசியல் ஆகியவற்றைக் கடந்து காழ்ப்புணா்ச்சி பாராமல் உழவா்களுக்காகப் போராடக்கூடிய நேரம் இது.
ஒரு உழவா் இந்த நாட்டை ஆள வேண்டும் என்ற முழக்கத்துடன் அனைவரும் திருவண்ணாமலை மாநாட்டில் பங்கு பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.