செய்யாறு சிப்காட்டில் மரக்கன்றுகள் நடும் பணி
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சிப்காட் தொழிற்பூங்காவில் 1,500 மரக்கன்றுகள் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்பேரில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிப்காட் தொழிற்பூங்காக்களில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, தமிழக வனத்துறை மூலம் செய்யாறு சிப்காட் தொழிற்பூங்காவில் வெம்பாக்கம் வட்டாட்சியா் துளசிராமன் முன்னிலையில் 1,500 மரக்கன்றுகள் நடப்பட்டன.
நிகழ்வில், தனி வட்டாட்சியா் பெருமாள், பல்வேறு தொழிற்சாலைகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை திட்ட அலுவலா் கு.கலைச்செல்வி மற்றும் சிப்காட் பணியாளா்கள் செய்திருந்தனா்.