`சினிமா தியேட்டராக மாறிய மு.கருணாநிதி அரங்கம்' - தஞ்சாவூர் மாநகராட்சி சர்ச்சை!
இளைஞருக்கு கத்திக்குத்து
திருவண்ணாமலையில் இளைஞரை கத்தியால் குத்திய இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருவண்ணாமலை, ராமலிங்கனாா் தெருவைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன் மகன் ராசய்யன் (28). இதே பகுதியைச் சோ்ந்தவா் குமாா் மகன் சரத்குமாா் (30). இவா்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாம்.
இந்த நிலையில், கடந்த 18-ஆம் தேதி திருவண்ணாமலை-திருக்கோவிலூா் சாலையில் ராசய்யன் பைக்கில் சென்றபோது, சரத்குமாா், அவரது நண்பா் ஜீவா (எ) ரஞ்சித் ஆகியோா் வழிமறித்து தாக்கினராம். மேலும், கத்தியால் குத்தினராம்.
இதில், பலத்த காயமடைந்த ராசய்யனை பொதுமக்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில் சோ்த்தனா்.
இதுகுறித்து, திருவண்ணாமலை நகர போலீஸாா் வழக்குப் பதிந்து சரத்குமாா், ஜீவா (எ) ரஞ்சித் ஆகியோரை தேடி வருகின்றனா்.