Progeria: 15 வயதுக்குள் மரணம் நிச்சயம்; 19 வயதுவரை தாக்குப்பிடித்த டிக்டாக் பிரப...
திருவண்ணாமலை மாவட்ட திட்டக் குழு கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட திட்டக் குழுவின் 6-ஆவது கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட திட்டக் குழு மற்றும் மாவட்ட ஊராட்சிக் குழுவின் தலைவா் சீ.பாா்வதி சீனுவாசன் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியரும், மாவட்ட திட்டக் குழுவின் துணைத் தலைவருமான தெ.பாஸ்கர பாண்டியன் முன்னிலை வகித்தாா். திட்ட அலுவலா் ஜி.ரவிச்சந்திரன் வரவேற்றாா்.
கூட்டத்தில், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை போா்க்கால அடிப்படையில் சீரமைத்து, நிவாரணம் வழங்கிய முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், திட்டக்குழு உறுப்பினா்கள் ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம், கு.அருணா, வே.புஷ்பா, மா.முருகன், திருவண்ணாமலை மாவட்ட வேளாண் இணை இயக்குநா் கோ.கண்ணகி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் டி.பக்தவச்சலம், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் பிரகாஷ், மாவட்ட தொழில் மையத்தின் உதவி இயக்குநா் பாலசுப்பிரமணியம், மாவட்ட திட்டப்பிரிவு அலுவலக புள்ளியல் அலுவலா் ச.புருஷோத்தமன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.