அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகைக்கு எதிராக கேஜரிவால் மனு: ஜன.30ல் விசாரணை!
தில்லி கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிக்கை விசாரணை உத்தரவை எதிர்த்து முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தாக்கல் செய்த மனு ஜனவரி 30ல் விசாரணை நடத்தப்படும் என்று தில்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முன்னதாக இந்த வழக்கு விசாரணை பிப்ரவரி 19, 2025-க்கு பட்டியலிடப்பட்ட நிலையில், கேஜரிவாலின் வழக்குரைஞர்கள் வேண்டுகோளுக்கிணங்க உயர் நீதிமன்றம் ஜனவரி 30 அன்று வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.
அடுத்தாண்டு தில்லியில் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த வழக்கை முன்கூட்டியே விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளது.
ஆம் ஆத்மி கட்சித் தலைவர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் நிபந்தனை குறித்த வழக்கும் ஜனவரி 30-க்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.