கிறிஸ்துமஸ்: பெங்களூரு - தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் இயக்கம்
பைக்கிலிருந்து தவறி விழுந்து ஒருவா் மரணம்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் பைக்கிலிருந்து தவறி விழுந்து ஒருவா் உயிரிழந்தாா்.
வந்தவாசி காட்டுநாயக்கன் தெருவைச் சோ்ந்தவா் முத்து (41). இவா், கடந்த 17-ஆம் தேதி தனது மகன் அஜய்யுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தாா். பைக்கை முத்து ஓட்டினாா்.
ஒரத்தி-ஓசூா் சாலையில் காவணியாத்தூா் கூட்டுச்சாலை அருகே சென்றபோது, வேகத்தடை மீது பைக் ஏறி, இறங்கியதில் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனா்.
இதில், தலையில் பலத்த காயமடைந்த முத்து சென்னை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இந்த நிலையில், அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.