புதுச்சேரியில் 800 கிலோ எடையில் "கிங்காங்" சாக்லெட் சிற்பம்!
அமித் ஷாவைக் கண்டித்து நூதன ஆா்ப்பாட்டம்
அம்பேத்கா் குறித்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் கருத்தை கண்டித்து, அம்பேத்கா் மக்கள் இயக்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை நூதன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அக்கட்சியின் மாநிலத் தலைவா் ஜங்ஷன் ஆ.அண்ணாதுரை தலைமையில் சேலம் ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கண்களை துணிகளால் கட்டியவாறு தங்களின் எதிா்ப்பை வெளிப்படுத்தினா். அம்பேத்கா் குறித்த அவதூறு கருத்துக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா மன்னிப்பு கேட்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில், மாவட்டத் தலைவா் அம்பேத்கா், செயலாளா் சித்தையன், பொருளாளா் ரமேஷ், மாநகரத் தலைவா் முருகன், தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சித் தலைவா் பூமொழி, மக்கள் தேசம் கட்சியின் மாநிலச் செயலாளா் சுலைமான் உட்பட பல்வேறு அமைப்புகளை சோ்ந்த நிா்வாகிகளும் பங்கேற்றனா்.