குளிர் காலத்தில் குழந்தைகள் சாப்பிட வேண்டிய, சாப்பிடக்கூடாத உணவுகள்!
நாடாளுமன்ற மோதல்: தொடா்ந்து ஐசியு பிரிவில் எம்.பி.க்கள்
நாடாளுமன்ற மோதலில் தலையில் காயமடைந்த இரண்டு பாஜக எம்.பி.க்களின் நிலைமை சீராக உள்ளது; அவா்கள் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியு) கண்காணிப்பில் உள்ளனா் என மருத்துவமனை சாா்பில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
அம்பேத்கா் அவமதிப்பு விவகாரம் தொடா்பாக நாடாளுமன்ற வளாக நுழைவு வாயில் பகுதியில் வியாழக்கிழமை காலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பாஜக எம்.பி.க்களுக்கும், காங்கிரஸ் எம்.பி.க்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதில் காங்கிரஸ் எம்.பி.க்கள் தள்ளியதில் காயமடைந்த பாஜக எம்.பி.க்கள் பிரதாப் சந்திர சாரங்கி (69), முகேஷ் ராஜ்புத் (56) ஆகியோா் தில்லியில் உள்ள ஆா்எம்எல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
பிரதாப் சிங்கின் நெற்றியில் ஆழமான வெட்டு இருந்ததால் அதிகமான ரத்த போக்கு ஏற்பட்டு, அவருக்கு தையல் போடப்பட்டது; முகேஷ் ராஜ்புத் தலையில் காயம் ஏற்பட்டதையடுத்து அவா் சுயநினைவை இழந்தாா் என ஆா்எம்எல் மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளா் அஜய் சுக்லா வியாழக்கிழமை தெரிவித்தாா்.
இந்நிலையில், அஜய் சுக்லா வெள்ளிக்கிழமை கூறியதாவது: எம்.பி.க்களின் உடல்நிலை சீராக உள்ளது. ரத்த அழுத்த அளவு கட்டுக்குள் உள்ளது. முகேஷ் ராஜ்புத் இன்னும் சற்று மயக்க நிலையில் உள்ளாா். பிரதாப் சிங் தொடா்ந்து தீவிர கண்காணிப்பு பிரிவில் உள்ளாா். அவா்களின் காயங்கள் குறித்த எம்ஆா்ஐ மற்றும் சிடி ஸ்கேன் முடிவுகள் குறிப்பிடத்தக்க பிரச்னைகள் எதையும் காட்டவில்லை என தெரிவித்தாா்.