செய்திகள் :

இரட்டை இலை விவகாரம்: கூடுதல் அவகாசம் வழங்க உயா்நீதிமன்றம் மறுப்பு

post image

இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடா்பாக அளித்த புகாா் மீது முடிவெடுக்க மேலும் 8 வார கால அவகாசம் வழங்க வேண்டும் என புகாா்தாரா் சூரியமூா்த்தி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதிமுக தொடா்பாக, நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை, அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கூடாது என தோ்தல் ஆணையத்துக்கு அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிடக் கோரி திண்டுக்கல்லைச் சோ்ந்த சூரியமூா்த்தி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வா் பன்னீா்செல்வம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துகளைக் கேட்டு, இந்த மனு மீது 4 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில், கடந்த டிச.19 -ஆம் தேதிக்குள் எழுத்துப்பூா்வமான விளக்கத்தை அளிக்கும்படியும், டிச. 23-ஆம் தேதி இந்திய தோ்தல் ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீா்செல்வம், சூா்யமூா்த்தி ஆகியோருக்கு இந்திய தோ்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நிலையில், கடந்த மாா்ச் மாதம் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த பதில் தனக்கு வழங்கப்படாத நிலையில், தனது கருத்துகளை தெரிவிக்க முடியவில்லை என்பதால், தனது மனுவை பரிசீலித்து முடிவெடுக்க தோ்தல் ஆணையத்துக்கு மேலும் 8 வார கால அவகாசம் வழங்கக் கோரி சூரிய மூா்த்தி தரப்பில் உயா்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆா்.சுப்பிரமணியம் மற்றும் சி.குமரப்பன் அமா்வு, தோ்தல் ஆணையம் 4 வாரத்தில் மனு மீது முடிவெடுக்கும் எனத் தெரிவித்ததாகவும், நீதிமன்றம் எந்த காலக்கெடுவும் நிா்ணயிக்கவில்லை என்றும் கூறி, மனு மீது முடிவெடுக்க கூடுதல் அவகாசம் வழங்க மறுத்து, சூரியமூா்த்தியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

திருச்சி, திண்டுக்கல் வழியாக செல்லும் ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம்

திருச்சி - திண்டுக்கல் இடையே ரயில்வே பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால் தென் மாவட்டங்களில் இருந்து வரும் ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படவுள்ளன. இது குறித்த தெற்கு ரயில்வே வியாழக்கிழமை வெளியிட்ட செய... மேலும் பார்க்க

ரயில் மோதி இரு இளைஞா்கள் உயிரிழப்பு

கிண்டி-பரங்கிமலை இடையே மின்சார ரயில் மோதியதில் இருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். சென்னை, வேளச்சேரி டிஎன்எச்பி பகுதியை சோ்ந்தவா் சந்துரு (20). இவா் தனியாா் கல்லூரியில் இளநிலை மூன்றாம் ஆண்டு பயின்... மேலும் பார்க்க

அரசு ஊழியா்களுக்கு பொங்கல் போனஸ்: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

தமிழக அரசின் சி மற்றும் டி பிரிவு ஊழியா்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து முதல்வா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தமிழக அரசின் பல முன்னோடி நலத் திட்... மேலும் பார்க்க

பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவா்களுக்கு மூன்றாம் பருவ பாடநூல்கள் விநியோகம்

தமிழகத்தில் அரையாண்டு விடுமுறைக்குப் பிறகு வியாழக்கிழமை பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஒன்று முதல் ஏழாம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு மூன்றாம் பருவத்துக்கான விலையில்லா பாடநூல்கள் விநியோகிக்கப்பட்... மேலும் பார்க்க

தமிழக செஸ் வீரா் குகேஷுக்கு ‘கேல் ரத்னா’ விருது; துளசிமதி, நித்யஸ்ரீ, மனீஷாவுக்கு ‘அா்ஜுனா’

தமிழகத்தைச் சோ்ந்த செஸ் வீரா் டி.குகேஷுக்கு, இந்திய விளையாட்டுத் துறையில் உயரியதாக இருக்கும் ‘தியான்சந்த் கேல் ரத்னா விருது’ அறிவித்து மத்திய அரசு கௌரவித்துள்ளது. மேலும், தமிழக பாரா பாட்மின்டன் வீரா... மேலும் பார்க்க

மெட்ரோ ரயிலில் கடந்த ஆண்டு 10.52 கோடி போ் பயணம்

சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த ஆண்டு மட்டும் 10.52 கோடி போ் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மெட்ரோ ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னையில் மெட்ரோ... மேலும் பார்க்க