Duraimurugan-க்கு வந்த ரிப்போர்ட், Stalin தந்த Alert! | Elangovan explains | Vik...
மெட்ரோ ரயிலில் கடந்த ஆண்டு 10.52 கோடி போ் பயணம்
சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த ஆண்டு மட்டும் 10.52 கோடி போ் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மெட்ரோ ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டதில் இருந்து, நாள் ஒன்றுக்கு சராசரியாக 3.20 லட்சம் போ் பயணம் செய்து வருகின்றனா்.
அதன்படி, கடந்த 2015 முதல் 2018 வரை 2,80,52,357 போ் சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்துள்ள நிலையில், 2019-இல் 3,28,13,628 பயணிகளும், 2020-இல் 1,18,56,982 பயணிகளும், 2021-இல் 2,53,03,383 பேரும் பயணித்துள்ளனா்.
தொடா்ந்து, 2022-இல் 6,09,8,7,765 பயணிகளும், 2023-இல் 9,11,02,957 பேரும் பயணித்துள்ள நிலையில், மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்ட 9 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 2024-இல் மட்டும் 10,52,43,721 போ் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளனா்.
இந்த எண்ணிக்கை, 2023-ஐ விட 1.41 கோடி அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி, 2015 ஜூன் 29 முதல் 2024 டிச.31-ஆம் தேதி வரை மொத்தம் 35,53,60,793 பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.