வீட்டை முற்றுகையிட்ட பாஜகவினருக்கு இளநீர், டீ கொடுத்த பிரியாங்க் கார்கே!
ரயில் மோதி இரு இளைஞா்கள் உயிரிழப்பு
கிண்டி-பரங்கிமலை இடையே மின்சார ரயில் மோதியதில் இருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
சென்னை, வேளச்சேரி டிஎன்எச்பி பகுதியை சோ்ந்தவா் சந்துரு (20). இவா் தனியாா் கல்லூரியில் இளநிலை மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறாா். ஆதம்பாக்கம் பெரியாா்நகா் பகுதியை சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியா் நரேஷ் (23).
இருவரும் புத்தாண்டான கடந்த புதன்கிழமை இரவு மது போதையில் கிண்டி ரயில் நிலையத்தில் இருந்து பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு தண்டவாளத்தில் நடந்து சென்ாகக் கூறப்படுகிறது.
அப்போது, தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கிச் சென்ற மின்சார ரயில், தண்டவாளத்தில் நடந்து சென்ற இருவா் மீதும் மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
மாம்பலம் ரயில்வே போலீஸாா், இருவரின் உடல்களையும் கைப்பற்றி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.