மீண்டும் ரூ. 58,000-ஐ கடந்தது தங்கம் விலை!
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ. 58,000-ஐ கடந்துள்ளது.
தங்கத்தின் விலை புதன்கிழமை காலை சவரன் ரூ. 57,440-க்கு விற்கப்பட்ட நிலையில், தொடர்ந்து மூன்றாவது நாளாக விலை உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க : அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!
சென்னையில் இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 640 அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 7,260-க்கும், ஒரு சவரன் ரூ. 58,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
புத்தாண்டு தொடங்கியதில் இருந்து தொடர்ந்து தங்கத்தின் விலை ஏற்றம் கண்டு வருவதால் நகை பிரியர்கள் கவலை அடைந்துள்ளனர்.
வெள்ளியின் விலையும் இரண்டாவது நாளாக கிராமுக்கு ரூ. 1 உயர்ந்து ரூ. 100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,00,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.