செய்திகள் :

அதானி வழக்கு: விசாரணையை வேகப்படுத்த அமெரிக்க நீதிமன்றம் புதிய உத்தரவு!

post image

அதானி லஞ்ச புகார் தொடர்புடைய அனைத்து வழக்குகளையும் ஒரே நீதிபதி அமர்வு விசாரணை நடத்துவதற்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2020 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில், சூரிய ஒளி மின்சாரம் விநியோக ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததை மறைத்து அமெரிக்காவிடம் முதலீடுகளை பெற்றதாக அமெரிக்க நீதிமன்றத்தில் கெளதம் அதானி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தொழிலதிபர் கெளதன் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி, வினீத் ஜெயின், ரஞ்சித் குப்தா, செளரவ் அகர்வால் உள்பட 7 பேரின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : அதானிக்கு பிடிவாரண்ட்! அமெரிக்க நீதிமன்றம் பிறப்பித்தது!

அதானி மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக அமெரிக்க நீதித்துறை குற்ற வழக்கு தொடுத்துள்ள நிலையில், அமெரிக்க பங்கு பரிவர்த்தனை பாதுகாப்பு ஆணையம் தரப்பில் இரண்டு சிவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த மூன்று வழக்குகளும் அமெரிக்க நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், இவை அனைத்தையும் ஒரே நீதிபதி அமர்வுக்கு மாற்றி நியூயார்க் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதித்துறை செயல்திறனை மேம்படுத்தும் நோக்கிலும், மூன்று வழக்குகள் வெவ்வேறு அமர்வில் விசாரிக்கப்படும் பட்சத்தில் விசாரணை தேதிகளில் முரண்பாடு ஏற்படுவதை தவிர்க்கும் நோக்கிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து வழக்குகளையும் மாவட்ட நீதிபதி நிக்கோலஸ் ஜி கராஃபிஸ் விசாரிப்பார் என்றும் அனைத்து வழக்குகளும் தனித்தனியே விசாரிக்கப்பட்டு உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அதானி கிரீன் நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றமும், அமெரிக்க பங்கு பரிவர்த்தனை பாதுகாப்பு ஆணையமும் பதிவு செய்திருக்கும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை எனக் கூறி அதானி குழுமம் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புஷ்பா 2 விவகாரம்: நடிகர் அல்லு அர்ஜுன் காவல் நிலையில் ஆஜர்!

ரசிகை பலியான விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் விசாரணைக்காக காவல் நிலையில் ஞாயிற்றுகிழமை ஆஜரானார்.தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திலுள்ள திரையரங்கில் டிச. 4 ஆம் தேதி புஷ்பா 2 படம் பார்க்க அல்லு அர்ஜுன் வந... மேலும் பார்க்க

பனிமூட்டம்: ஸ்ரீநகரில் 10 விமானங்கள் ரத்து

பனிமூட்டம் காரணமாக ஸ்ரீநகர் விமான நிலையத்தில் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீரின், ஸ்ரீநகர் விமான நிலையத்தில் ஞாயிற்றுகிழமை அதிகாலை 50 மீட்டர் மீட்டா் தொலைவு வரை மட்டுமே தெளிவான காண... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் என்கவுன்டரில் 4 நக்சல்கள், காவலர் ஒருவர் பலி

சத்தீஸ்கரில் நடந்த என்கவுன்டரில் நான்கு நக்சல்கள், காவலர் ஒருவர் பலியானார்கள். சத்தீஸ்கர் மாநிலம், நாராயண்பூர் மற்றும் தண்டேவாடா மாவட்டங்களின் எல்லையில் உள்ள தெற்கு அபுஜ்மாத் வனப்பகுதியில் சிறப்பு அதி... மேலும் பார்க்க

வீட்டை முற்றுகையிட்ட பாஜகவினருக்கு இளநீர், டீ கொடுத்த பிரியாங்க் கார்கே!

கர்நாடகத்தில் மாநகராட்சி ஒப்பந்ததாரர் தற்கொலை விவகாரத்தில் அமைச்சர் பிரியாங்க் கார்கே பதவி விலக வேண்டுமென பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.கர்நாடக மாநிலம் குல்பர்காவைச் சேர்ந்தவர் சச்சின் பஞ்சால் (26). ம... மேலும் பார்க்க

வன்முறையைத் தூண்டும் பாடல் வெளியீடு: காங்கிரஸ் எம்.பி.க்கு எதிராக எஃப்ஐஆா்

குஜராத் மாநிலம் ஜாம்நகரில் தான் பங்கேற்ற வெகுஜன திருமண நிகழ்ச்சி காணொலியுடன் இரு சமூகத்தினரிடையே வன்முறையைத் தூண்டும் வகையிலான பாடலை இணைத்து சமூக ஊடகத்தில் வெளியிட்ட காங்கிரஸ் எம்.பி. இம்ரான் பிரதாப்க... மேலும் பார்க்க

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னிலை பெறும்: பிரதமா்

‘செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னிலை பெறும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி உறுதி தெரிவித்தாா். தில்லியில் இன்ஃபோசிஸ் நிறுவன முன்னாள் தலைமை செயல் அதிகாரி விஷால் சிக்காவுடனான சந்திப்புக்க... மேலும் பார்க்க